பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும், ஏழு மாதங்களுக்கு பின், மீண்டும் இன்று முதல் மூடப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல், தோட்டக்கலை, சுற்றுலா கழகத்துக்கு உட்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.தளர்வுக்கு பின், செப்., 9 முதல், தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, இன்று
 ஊட்டி, சுற்றுலா தலங்கள், மூடல்

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும், ஏழு மாதங்களுக்கு பின், மீண்டும் இன்று முதல் மூடப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல், தோட்டக்கலை, சுற்றுலா கழகத்துக்கு உட்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

தளர்வுக்கு பின், செப்., 9 முதல், தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, இன்று முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் மீண்டும் மூடப்படுகின்றன.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''தொழில் ரீதியாக வருவோருக்கு மட்டும், ஆதாரங்களின் அடிப்படையில் அனுமதி உண்டு. சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படமாட்டார்கள். ''ஆன்லைன் பதிவு தொடரும். மாவட்ட எல்லைகள் ஏதும் மூடப்படவில்லை.

வருவாய் துறையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்,'' என்றார்.சுற்றுலா மையங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பால், நேற்று சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது. கோத்தகிரி கோடநாடு காட்சிமுனைக்கு, அதிக சுற்றுலா பயணியர் வந்தனர். வானம் தெளிவாக காணப்படுவதால், கோடநாடு காட்சி முனையில் இருந்து, தெங்குமரஹாடா வயல்வெளி, மாயாறு, வரலாற்று அல்லிராணி கோட்டை ஆகியவற்றின் அழகை கண்டு ரசித்தனர்.ஒகேனக்கல் வர தடைதர்மபுரி கலெக்டர் கார்த்திகா அறிக்கை:மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், இன்று முதல், மறு உத்தரவு வரும் வரை, ஒகேனக்கல்லுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




பூங்காக்களில் நடைபயிற்சி செய்ய தடை



கொரோனா பாதிப்பை தொடர்ந்து, தோட்டக்கலை பூங்காக்களில், நடை பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.சென்னை, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஏழு மாவட்டங்களில், 21 பூங்காக்களை தோட்டக்கலை துறையினர் அமைத்துள்ளனர். சென்னையில், தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, கோபாலபுரம் செங்காந்தள் பூங்கா, மாதவரம் தோட்டக்கலை செயல்விளக்க பூங்கா, வண்ணாரபேட்டை பாரம்பரிய பூங்கா ஆகியவை இதில் அடக்கம்.கொரோனா பரவலை தொடர்ந்து, மலைவாசஸ்தலங்களில் உள்ள பூங்காக்களில், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் உள்ள பூங்காக்களிலும், பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த பூங்காக்களில் மாத கட்டணம் செலுத்தி, காலை மற்றும் மாலை நேரங்களில், உள்ளூர்வாசிகள் பலரும் நடைபயிற்சி, தியான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர அரசு ஒப்புதல் அளிக்காததால், இன்று முதல் தோட்டக்கலை பூங்காக்களில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே, பூங்காக்களில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தோட்டக்கலை துறை திட்டமிட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-202107:28:35 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் வூட்டிலிருந்தே சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழுங்கள்.
Rate this:
Cancel
20-ஏப்-202107:28:29 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் வூட்டிலிருந்தே சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழுங்கள்.
Rate this:
Cancel
20-ஏப்-202107:28:22 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் வூட்டிலிருந்தே சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X