நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி கூட்டுவது

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
முதலில் கொரோனா வைரசுக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இந்தியாவில் பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தினோம்.காலம் காலமாக நம் நாட்டில் பயன்படுத்திய இயற்கை, சித்த மருத்துவத்தை அரசு ஊக்கப்படுத்தியதோடு, அரசே சித்த மருந்துகளை நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகித்தது. மக்களும் இயற்கை மூலிகை மருந்துகளையும், கபசுரக் குடிநீர்,
 நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி கூட்டுவது

முதலில் கொரோனா வைரசுக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இந்தியாவில் பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தினோம்.

காலம் காலமாக நம் நாட்டில் பயன்படுத்திய இயற்கை, சித்த மருத்துவத்தை அரசு ஊக்கப்படுத்தியதோடு, அரசே சித்த மருந்துகளை நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகித்தது. மக்களும் இயற்கை மூலிகை மருந்துகளையும், கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொண்டார்கள்.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் காட்சிகள் மாறுகின்றன. தடுப்பூசிகள் வந்துவிட்டன. 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். நம் நாட்டின் 138 கோடி ஜனத்தொகையில், சுமார் 12 கோடி பேர்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மருந்துகளே கண்டுபிடிக்கப்படாத முதல் அலையின் காலகட்டத்தில் மக்களை காப்பாற்ற உதவிய கதாநாயகன் கபசுரக் குடிநீர் பற்றியோ, சித்த, ஹோமியோபதி மருந்துகளைப் பற்றியோ இப்போது நாம் மறந்துவிட்டோம்!


நோய் எதிர்ப்பு சக்திகொரோனா பாதித்தவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 100-ல் 95 பேர் தப்பித்து விடுகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மட்டும் பலியாகிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி கூட்டுவது?இரண்டு வழிகளில் கூட்டலாம்.
1. உணவு முறை மாற்றங்களாலும், இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்கள், பழங்கள் போன்றவற்றாலும் கூட்டலாம்.

2. மருந்துகளாலும் கூட்டலாம்.


தாய்ப்பால்குழந்தைக்கு ஒன்றரை வருடமாவது தாய்ப்பால் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே பெறமுடியும். ஆனால் பெரும்பாலான தாய்மார்கள், குழந்தை கொழுக் மொழுக்கென்று இருக்கவேண்டும் என்று நினைத்து பால் பவுடர்களையும், டின் உணவுகளையும் கொடுக்கிறார்கள். சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று நினைத்து அதைத் தவிர்த்து விடுகிறார்கள். செயற்கை உணவுகளை உண்ணும் குழந்தைகள் குண்டாக, பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு எல்லாம் வரலாம். சில தாய்மார்கள் பால் சரிவர சுரக்காததால் வேறு வழியில்லாமல் பால் பவுடரைக் கொடுப்பார்கள். இதற்கு அற்புதமான மாற்று உணவு தேங்காய்ப்பால்.


தேங்காய்ப் பால்இது ஒரு சிறந்த தேவாமிர்த உணவு. தாய்ப்பாலுக்கு இணையானது தேங்காய்ப்பால். இது உணவு மட்டுமல்ல, மருந்தும்கூட.தேங்காய் கொழுப்பு நிறைந்தது என்று பலரும் நினைத்து தவிர்க்கிறார்கள். ஆனால் அதில் உள்ளது நல்ல கொழுப்பு (HDL).தேங்காயை தினமும் பச்சையாக சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு ஆற்றல் அபரிமிதமாகக் கிடைக்கும். நரம்புகள், எலும்புகள் வலுப்பெறும், ரத்த நாளங்கள் அடைபடாமல் பாதுகாக்கும், நுரையீரலில் கபம் கட்டாமல் சுத்தப்படுத்தும்.
வாழ்வின் கடைசி தருவாயில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து வந்தால் வாழ்நாளை கூட நீட்டிக்க முடியும். தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் போன்ற சில வேதிப்பொருட்கள் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டவை.


கருப்பு திராட்சைகருப்பு திராட்சை கொட்டையில் ரெஸ்வடிரால் போன்ற பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவை இருதயத்திற்கும், நுரையீரல், ஈரல் போன்ற உறுப்புகளின் செயல் திறனுக்கும் உதவுவதோடு, நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும்.நாட்டு மாதுளை இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதோடு, ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும். இன்னும் நெல்லிக்காய் போன்ற எண்ணற்ற காய்கறிகளும், பழங்களும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.


மசால் பொருட்கள்கொரோனாவினால் நம் நாட்டில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது உலகில் சர்ச்சையையே உண்டாக்கியது. பலரும் இதை ஆராய்ந்தனர். கடைசியில் அவர்கள் முடிவுக்கு வந்தது, நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் மசால் பொருட்கள். மஞ்சள், இஞ்சி, மிளகு, ஏலக்காய், பூண்டு, லவங்கம் போன்றவை பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதாக முடிவுக்கு வந்தனர். மேலைநாட்டுத் துரித உணவுகளில் கிடைக்காத நோய் எதிர்ப்பு சக்தி நம்முடைய சாம்பாரிலும் ரசத்திலும் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.


கபசுரக் குடிநீர்கபம் + சுரம் இரண்டையும் கட்டுப்படுத்தும் மருந்துதான் கபசுரக் குடிநீர். இதில் பதினைந்து வகை மூலிகைப் பொருட்கள் உள்ளன. நுரையீரலில் கபம் கட்டி, சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமலும், சளி வெளியே வராமலும் இருக்கும். கபசுரக் குடிநீர் பயன்படுத்துவதால் சுவாசப்பாதை விரிவடைந்து, கபத்தை வெளியேற்றும். இதிலுள்ள மூலிகைகளைப் பற்றி சில வார்த்தைகள். சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கம், கற்பூரவள்ளி இலை இவை மார்புச் சளியை கரைத்து, மூச்சு இரைப்பு, இருமலை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்.நிலவேம்பு, சிறுகாஞ்சேரி, கோரைக்கிழங்கு இவை உடல் உஷ்ணத்தை குறைத்து, காய்ச்சலை கட்டுப்படுத்தும்.கோஷ்டம், அக்ரஹாரம், முள்ளி வேர் ஆகியவை கிருமிகளையும், நச்சுப் பொருட்களையும் அழிக்கும்.சிறுதேக்கு, சீந்தில், வட்டத்திருப்பி வேர் நோய் எதிர்ப்பு ஆற்றலைக்கூட்டி, வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.ஆடாதோடை கபத்தை இளக்கி வெளியேற்றி, தொண்டை பிரச்னைகளை சரி செய்கிறது. இவை அனைத்தும் கஷாயமாக சுண்டக்காய்ச்சி பருகும் பொழுது, நல்ல நிவாரணம் கிடைத்து, நல்ல துாக்கத்தை கொடுக்கும்.


சிந்தாமணி மருத்துவம்கபசுரக் குடிநீர் தவிர, சிந்தாமணி மருத்துவத்தில் இருந்து சில மூலிகைகளைக் கையாண்டு 'சுவாசா' என்ற மூலிகைப் பொடியையும் நாங்கள் முதல் அலையில் ஆயிரக்கணக்கானோருக்கு கொடுத்து நல்ல பலன் கண்டோம்.அஸ்வகந்தா, அதிமதுரம், சிறு நாகப்பூ போன்ற ஒன்பது அரிய மூலிகைகளின் கலவை தான் அது. அஸ்வகந்தா மிக அற்புதமான மருந்தாகும். சாதாரண ஜலதோஷம் முதல் சளி, இருமல், ஆஸ்துமா, நிமோனியா வரை சுவாசப் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கவல்லது. நம் உடலில் ஏழு தாதுக்களின் கூட்டு சாராம்சம்தான் 'இம்யூனிட்டி' என்கிற நோய் எதிர்ப்பு சக்தி. இதை அஸ்வகந்தா நன்றாகத் துாண்டி
விடும். இது தவிர சர்க்கரை நோய், இருதய அடைப்புகள் போன்ற பல பிரச்னைகளுக்கும் இது அரிய மருந்து.பிரதமர் மோடி துாண்டுதலில் ஆயுஷ் மருந்து துறையினர், டெல்லி ஐஐடி ஆராய்ச்சியாளர்களும், ஜப்பான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் அட்வான்ஸ்டு இன்டஸ்ட்ரியல் சயின்ஸ் & டெக்னாலஜியின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், அஸ்வகந்தாவின் அற்புதப் பலன்களை ஒத்துக்கொண்டார்கள்.


அழியாத வைரஸ்இந்த வைரஸ் இப்போதைக்கு அழியப் போவதில்லை; இந்த வைரசோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். நம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதோடு, ஆரோக்கியமான உணவும், சுலபமான, மலிவான கபசுரகுடிநீர், சுவாசா மூலிகைப்பொடி போன்றவற்றின் துணையோடு நாம் கொரோனாவை வெற்றிகொள்ளலாம்.- டாக்டர். ராஜரீகாஅக்குபஞ்சர் & வர்மா மருத்துவர்மதுரை 94875 82830

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-ஏப்-202116:09:55 IST Report Abuse
Loganathan Kuttuva ஆயுர்வேத மருந்து கடைகள் தற்பொழுது அதிகமாகி உள்ளது . பக்க விளைவுகள் இல்லை .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-ஏப்-202110:34:30 IST Report Abuse
vbs manian நல்ல பதிவு.நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X