பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்!

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை, குறைந்தபட்சம், 15 நாட்களுக்கு முன் வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலால், அடுத்த மாதம் நடக்கவிருந்த, பிளஸ் 2 தேர்வுகள் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி கல்வித் துறையின், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள
பிளஸ் 2 தேர்வு ,எப்போது?  தேர்வுத்துறை விளக்கம்!

சென்னை : 'தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை, குறைந்தபட்சம், 15 நாட்களுக்கு முன் வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், அடுத்த மாதம் நடக்கவிருந்த, பிளஸ் 2 தேர்வுகள் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி கல்வித் துறையின், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பிளஸ் 2 மாணவர்களுக்கு, தற்போது நடத்தப்படும் செய்முறை தேர்வுகள் மட்டும், திட்டமிட்டபடி உரிய நாட்களில் நடத்தப்படும்.
வரும், 5ம் தேதி துவங்க இருந்த பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என, முதல்வரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மீண்டும் நடத்தப்படும் தேதி விபரம், பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு துவங்குவதற்கு குறைந்த பட்சம், 15 நாட்களுக்கு முன், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படும்.

இந்த விபரங்கள், தலைமை ஆசிரியர்கள் வழியே, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.செய்முறை தேர்வை ஏற்கனவே திட்டமிட்ட தேதியில், கொரோனா தடுப்பு வழிகாட்டலை பின்பற்றி, நடத்தி முடிக்க வேண்டும். செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நாட்களில், ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
20-ஏப்-202109:21:51 IST Report Abuse
rajan now is the time to find out the ways of conducting exams online without compromising the standard of education at the level of the classes / standard.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X