அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்டு பண்ணையில் ஸ்டாலின்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (106)
Share
Advertisement
கொடைக்கானல் :கொடைக்கானலில், குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று மன்னவனுார் ஆட்டு பண்ணையை சுற்றிப்பார்த்து பொழுது போக்கினார். சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், ஏப்., 16ல், ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து, பாம்பார்புரம் தனியார் சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.இரு நாட்களாக, விடுதி அறையிலேயே அன்றாட உடற்பயிற்சி, தியானம் மேற்கொண்ட
 ஆட்டு பண்ணை, ஸ்டாலின்

கொடைக்கானல் :கொடைக்கானலில், குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று மன்னவனுார் ஆட்டு பண்ணையை சுற்றிப்பார்த்து பொழுது போக்கினார். சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், ஏப்., 16ல், ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து, பாம்பார்புரம் தனியார் சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.

இரு நாட்களாக, விடுதி அறையிலேயே அன்றாட உடற்பயிற்சி, தியானம் மேற்கொண்ட ஸ்டாலின், அங்கேயே ஓய்வெடுத்தார்.கட்சியினர் உட்பட யாரையும் சந்திக்காமல், பேரக் குழந்தைகளுடன், உள் விளையாட்டு அரங்கில் விளையாடி மகிழ்ந்தார்.

மூன்றாவது நாளான நேற்று காலை, மேல்மலை பகுதியில், கூக்கால் ஏரிக்கு சென்று, நடைப்பயிற்சி மேற்கொண்டார். மன்னவனுாரில் உள்ள மத்திய அரசின் ஆட்டு பண்ணைக்கு சென்று, செம்மறி ஆடுகள், முயல்களை பார்வையிட்டனர். ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும், முயல்களை கையில் எடுத்து ரசித்தனர்.பண்ணை செயல்பாடுகள் குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக, அங்கு குடும்பத்துடன் பொழுதுபோக்கினார்.நேற்று சென்னை திரும்புவதாக இருந்த நிலையில், மாலை வரை, தகவல் உறுதி செய்யப்படாமல் இருந்தது. பொதுமக்கள், கட்சியினர் திரண்டு விடாத வகையில், வழக்கமான காரை தவிர்த்து, வேன் மூலம் ஸ்டாலின் பயணித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-ஏப்-202120:38:24 IST Report Abuse
bal கொடைக்கானலுக்கு பொது மக்கள் அனுமதி இல்லை..இந்த ஆளுக்கு மட்டும் என்ன...???
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
22-ஏப்-202120:37:53 IST Report Abuse
bal இது என்ன செய்தி????
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
22-ஏப்-202120:37:40 IST Report Abuse
bal ரம்ஜானுக்கு எத்தனை எடுத்துக்கொண்டு போகலாம்னு கணக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X