ஒரே கட்டமாக தேர்தல் நடத்த மம்தா மீண்டும் வேண்டுகோள்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கோல்கட்டா: “கொரோனா பரவலை கருத்தில் வைத்து, அடுத்த மூன்று கட்ட தேர்தல்களையும், ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மீண்டும் வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. குற்றச்சாட்டு இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு
ஒரே கட்டம், தேர்தல் ,மம்தா  வேண்டுகோள்

கோல்கட்டா: “கொரோனா பரவலை கருத்தில் வைத்து, அடுத்த மூன்று கட்ட தேர்தல்களையும், ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மீண்டும் வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.


குற்றச்சாட்டு


இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு, நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்கிடையே, மாநிலத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பேரணிகளால், வேகமாக வைரஸ் பரவி வருவதாக, பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், இங்குள்ள உத்தர தினஜ்பூரில், நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தில், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே, இதை கருத்தில் வைத்து, அடுத்த மூன்று கட்ட தேர்தல்களையும், ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

என் இரு கைகளையும் கூப்பி, வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ஒரே நாளில் முடியாவிட்டால், இரண்டு நாட்களிலாவது நடத்தி முடியுங்கள்.ஏற்கனவே இது தொடர்பாக வலியுறுத்தினேன். தேர்தல் ஆணையம், அதை அலட்சியப்படுத்தி விட்டது. பா.ஜ., கூறுவதற்கு ஏற்ப, தயவுசெய்து முடிவு எடுக்காதீர்கள். மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்குங்கள். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உங்கள் கடமை.கூட்ட நெரிசல் ஏற்படும் பகுதிகளில், நானும் என் கட்சித் தலைவர்களும், பேரணிகளை நடத்த மாட்டோம்.


அனுமதி



மேற்கு வங்கத்தை, குஜராத் மாநிலம் போல மாற்ற, பா.ஜ., வுக்கு மக்கள் அனுமதி வழங்கக்கூடாது.நாடு முழுதும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழல் மோசமடைந்துள்ளது. மாநில மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும், மேற்கு வங்க அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan murugesan - Bangalore,இந்தியா
20-ஏப்-202113:00:40 IST Report Abuse
saravanan murugesan ஒரேமுட்டா, ஒரே நேரத்துல கும்பலா போயி பூத்து'ல வோட்டு குத்திடணும், அப்பதான் காரோண ஜாஸ்தி ஆகும் ல
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
20-ஏப்-202111:41:27 IST Report Abuse
S.PALANISAMY சரியான யோசனை. ஆனால் யார் கேட்கப் போகிறார்கள் ? 8 கட்ட தேர்தலே ஒரு சதி திடடம். அப்படி இருக்க தேர்தல் ஆணையம் மம்தாவின் யோசனையை எப்படி ஏற்கும்?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
20-ஏப்-202111:33:04 IST Report Abuse
Milirvan //அடுத்த மூன்று கட்ட தேர்தல்களையும், ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.// பத்தாது.. ஒவ்வொருத்தரா போயி மெஷின்'ல வோட்டு போடுறத நிப்பாட்டிட்டு, ஒரேமுட்டா, ஒரே நேரத்துல கும்பலா போயி பூத்து'ல வோட்டு குத்திடணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X