பொது செய்தி

இந்தியா

கொரோனா 2வது அலை: எந்த வயதினருக்கு அதிகம்?

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா பரவலின் இரண்டாம் அலையிலும், பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 70 சதவீதம் பேர், 40 வயதிற்கு மேற்பட்டவர் கள்' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளது.ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா நேற்று கூறியதாவது:எங்கள் ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டும், தற்போதைய இரண்டாம் அலையிலும், வைரஸ் பாதிப்பிற்கு
கொரோனா 2வது அலை,எந்த வயது, பாதிக்கும்?


புதுடில்லி:'கொரோனா பரவலின் இரண்டாம் அலையிலும், பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 70 சதவீதம் பேர், 40 வயதிற்கு மேற்பட்டவர் கள்' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளது.

ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா நேற்று கூறியதாவது:எங்கள் ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டும், தற்போதைய இரண்டாம் அலையிலும், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 70 சதவீதம் பேர், 40 வயதை கடந்தவர்கள்.


latest tamil news


இதன்படி, வயதில் மூத்தோர் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.தற்போது, இளம் வயதினர் பாதிக்கப்படுவது சற்று அதிகரித்து உள்ளது. அறிகுறியற்ற பாதிப்புகளும் அதிகம் பதிவாகிறது.மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உயிரிழப்போரில், கடந்த முறைக்கும், தற்போதைய நிலைக்கும், வேறுபாடு ஏதும் இல்லை.தற்போது பாதிக்கப்படுவோருக்கு வறட்டு இருமல், தொண்டை புண் போன்ற அறிகுறிகள் இல்லை. ஆனால், பலருக்கும் மூச்சுத்திணறல் அதிகமாக உள்ளது. இதனால், 'ஆக்சிஜன் சிலிண்டர்' உதவியுடன் சிகிச்சை பெறுவோர் விகிதம், 54.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த முறை இது, 41.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது அலையில், 'வென்டிலேட்டர்' களின் அவசியம் குறைவாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202109:22:45 IST Report Abuse
g.s,rajan சிங்கம் ஒன்னு ரெண்டு மூணு மாதிரி அப்பப்ப அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கி வருது கொரோனா ,சீனாக்காரன் மேல குண்டு போட வேண்டியதுதான் போல .
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
20-ஏப்-202106:51:08 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சீனாக்காரன் திறமை வெளிப்படுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X