பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : உடனே ஊசி போடுங்கள்!

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: கொரோனா இரண்டாவது அலை, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை, தினமும் அதிகரிக்கிறது. கொரோனாவின் முதல் அலையின்போது, மக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: கொரோனா இரண்டாவது அலை, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை, தினமும் அதிகரிக்கிறது. கொரோனாவின் முதல் அலையின்போது, மக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசும், கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், முதல் அலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, கட்டுக்குள் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, கொரோனா தடுப்புக்காக விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அரசு அடுத்தடுத்து தளர்த்தியது.latest tamil newsஆனாலும் முக கவசம், சமூக இடைவெளி இரண்டையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என, வலியுறுத்தியது. நிலைமை சீராக சென்றபோது தான், ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு தான், கொரோனா மீண்டும் தலையெடுத்தது! அரசியல் கட்சிகள், பிரசாரம் என்ற பெயரில், முக கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல், கட்டுக்குள் அடங்காமல் கூட்டத்தை சேர்த்து, கொரோனாவை பரப்பின. இதை தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ கண்டுகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்து விட்டது போல், அரசியல்வாதிகள் செயல்பட்டதால், மக்களும் தங்கள் இஷ்டப்படி எல்லா இடங்களிலும் கூட்டம் கூட்டமாக கூடினர்; கொரோனா மீண்டும் பரவியது. தேர்தல் முடிந்ததும் தான், கொரோனா பரவல் அதிகமானது போல், அனைவரும் பதறுகின்றனர். பிரசாரத்தின் போது, நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை தான், இப்போது வெளியாகிறது.


latest tamil newsதற்போதைய இந்த நிலைக்கு, பொதுமக்கள் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. ஒரேயடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது தான், முக்கிய காரணம். அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு, இந்த அளவிற்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது. அரசின் அலட்சியமும், தேர்தல் பிரசாரமும் தான், கொரோனாவின் இரண்டாவது அலைக்கு காரணம். நோய்த் தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்படப்போவது நாமும், நம் குடும்பமும் தான். இதை உணர்ந்து, முக கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். தனக்கு வரும் வரை, கொரோனா வைரஸ் என்பது சாதாரணமான ஒன்று தான்; வந்த பின் தான் தெரியும், அதன் வலிமை. எனவே, தடுப்பூசி போடும் விஷயத்தில் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. உடனே, தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
www.dinamalar.com - Brisbane,ஆஸ்திரேலியா
21-ஏப்-202103:38:33 IST Report Abuse
www.dinamalar.com நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியன், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதுகின்றேன், 74 வயது ஓய்வு பெற்றவன், இந்தியாவில் இருக்கும்போது காஞ்சி மஹா பெரியவரிடம் கொஞ்ச காலம் தொடர்பு கொண்டிருந்தேன், பல நல்ல பழக்கங்களை கற்றிருந்தேன், அதில் ஒன்று காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் சாப்பிடுவேன், எப்படியென்றால் ஒரு பெரிய டம்பளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை சீரகத்தூள், அரை தேக்கரண்டி தேன், சிறிய எலுமிச்சம் பழத்தில் அரை பாதியை பிழிந்து குடிப்பதுதான் என் வழக்கமாக வைத்திருந்தேன், இந்தியாவிலும் சரி கடந்த 46 வருடங்களாக லேசான சளி இருமல் இருப்பின் அப்போது இந்த தண்ணீரைத்தான் குடிக்கும் பழக்கமாக வைத்திருக்கின்றேன், இந்த கரோனா பரவலுக்குப்பின் காலை எழுந்தவுடன் இந்த தண்ணீரைத்தான் குடிக்கும் வழக்கமாக கொண்டுள்ளேன், எந்த பிரச்னையும் இல்லை, மிக ஆரோக்கியமாக உள்ளேன், என்னை சார்ந்த சுற்றம், நட்பு, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் தொலைபேசியில், வாட்ஸாப்பில், எம்மைளில் ஏ-மெயிலில், சொல்லுகின்றேன், ஐஸ் கிரீம், குளிர்பானங்களை தவிர்த்து வெதுவெதுப்பான பானங்களை குடிக்கவேண்டும், சுக்கு காப்பியும் நல்ல பயன் தரும், இதை இன்றே பதிவு செய்யுங்கள், தெரியப்படுத்துங்கள், நன்றியுடன் மாரியப்பன் மஹாலிங்கம் ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதுகின்றேன்
Rate this:
Cancel
Kamaraj dasan - Trichy,இந்தியா
20-ஏப்-202122:02:30 IST Report Abuse
Kamaraj dasan தேர்தலால் தான் தமிழகத்தில் கொரநா 2 வந்தது என்றால் தேர்தல் நடக்காத உங்கள் கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தில் எப்படி கொரநா 2 மிக அதிகமாக வந்தது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஏப்-202121:19:13 IST Report Abuse
Ramesh Sargam ஒரேயடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியதும் அரசின் பெரிய தவறு. இந்த முறையாவது அப்படி எதுவும் தவறுகள் நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X