பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: ''ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பார்லிமென்ட் அவசரகால கூட்டத்தை இரண்டு நாட்கள் கூட்டி, கொரோனா நிலவரத்தை சமாளிக்க, தேசிய கொள்கையை வகுக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.நாட்டில், கொரோனா தொற்று பரவல், 1.50 கோடி எண்ணிக்கையை கடந்து விட்டது. கடந்த, 15 நாட்களில், 25 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது

புதுடில்லி: ''ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பார்லிமென்ட் அவசரகால கூட்டத்தை இரண்டு நாட்கள் கூட்டி, கொரோனா நிலவரத்தை சமாளிக்க, தேசிய கொள்கையை வகுக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news



நாட்டில், கொரோனா தொற்று பரவல், 1.50 கோடி எண்ணிக்கையை கடந்து விட்டது. கடந்த, 15 நாட்களில், 25 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து, காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான மணிஷ் திவாரி நேற்று கூறியதாவது: காலத்திற்கும் நம் நினைவை விட்டு அகலாத சோகம், நாட்டில் அரங்கேறி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை; ஆக்சிஜன் இல்லை; தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனா மரணங்களை சமாளிக்க முடியாமல், சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. நாட்டின் நிலைமை இப்படி இருக்கையில், மேற்கு வங்க தேர்தலில், பா.ஜ., தலைவர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த மோசமான நிலைமையை சமாளிக்க, பார்லிமென்டின் இரண்டு நாள் அவசரகால கூட்டத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும். அதில், தொற்று பரவல் நிலைமையை சமாளிக்க, தேசிய அளவிலான கொள்கையை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
20-ஏப்-202115:32:13 IST Report Abuse
Jayvee எங்கடா இந்தாள காணுமேன்னு பார்த்தேன்.. அடுத்தது கபில் சிபல், மணி ஷங்கர் அய்யர், திக்விஜய் சிங்க் என்று வரிசையாக கிளம்பும் ஈக்கள்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஏப்-202115:26:17 IST Report Abuse
r.sundaram பார்லிமென்ட் கூட்டினால் கரோனா நாட்டைவிட்டு போய்விடுமா? ஆளும்கட்சிமீது மற்ற காட்சிகள் காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம் மட்டுமே சுமத்தும் நிகழ்வுதான் நடக்கும். தற்போது நடக்கும் நிவாரண பணிகளுக்கும் வேட்டுவைக்கும். அரசின் கவனத்தை நிவாரண பணிகளில் இருந்து பாராளுமன்றத்தில் பதில் சொல்வதிலேயே நேரம் கடத்தப்படும். உருப்படியாக ஒன்றும் நடக்காது. இதற்க்கு பாராளுமன்றத்தை கூட்டாமலேயே இருக்கலாம்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
20-ஏப்-202109:58:06 IST Report Abuse
SENTHIL NATHAN டில்லியில் ஊரடங்கு அது கூட தெரியாமல் புலம்புதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X