சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்திருப்பூர் : திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர், லஞ்சம் கேட்கும், 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், பல்லடம் ரோட்டைச் சேர்ந்தவர் சரவணன். கடந்த, 16ம் தேதி, திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள, 'ஜாயின்ட் - 1' பத்திரப்பதிவு அலுவலகத்தில், இரண்டு பத்திரங்களை பதிவு செய்தார்.அன்று மாலை,

தமிழக நிகழ்வுகள்
1. பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்திருப்பூர் : திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர், லஞ்சம் கேட்கும், 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், பல்லடம் ரோட்டைச் சேர்ந்தவர் சரவணன். கடந்த, 16ம் தேதி, திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள, 'ஜாயின்ட் - 1' பத்திரப்பதிவு அலுவலகத்தில், இரண்டு பத்திரங்களை பதிவு செய்தார்.அன்று மாலை, அலுவலகத்தில் இருந்து, சரவணனை தொடர்பு கொண்ட ஒரு ஊழியர், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டு பேசியுள்ளார். சில மாதங்கள் முன், இதே அலுவலகத்தில், 'ஆன்லைன்' போலி ரசீது முறைகேடு தொடர்பாக, சார் - பதிவாளர்கள், 'சஸ்பெண்ட்' மற்றும் ஊழியர் மீதான கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். தற்போது, அதே அலுவலகத்தில் லஞ்ச புகார் எழுந்துள்ளது.latest tamil news2. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில்,அடுத்தடுத்து ஐந்து இடங்களில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, முகமூடி கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பிலேந்திரன், 59; இவரது மகன் அருண்குமார், 31; தனியார் வங்கி ஊழியர். இவருக்கு வரும், 22ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், பிலேந்திரன்வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒருவர், 'ஹெல்மெட்' அணிந்திருந்தார். மற்ற இருவர் மங்கி குல்லா அணிந்திருந்தனர். கை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி, அருண்குமார் அணிந்திருந்த, 2 சவரன் செயினை பறித்தனர்.எதிர்ப்பு தெரிவித்த பிலேந்திரனை, இரும்பு ராடால் தாக்கி, மூவரும் தப்பி ஓடினர்.
பிலேந்திரன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நால்வர் அடங்கிய அந்த கொள்ளை கும்பல், அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில் உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளை அடித்தது. மேலும், இருவரது வீடு புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கி, நகைகள், 'டிவி'யை கொள்ளை அடித்தது.தொடர்ந்து, கன்னிகாபுரம் கிராமத்தில், நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் ஞானசேகர் வீட்டிற்குள் அதிகாலை, 2:30 மணியளவில், நான்கு கொள்ளையர்களும் புகுந்து, துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.ஞானசேகர் குடும்பத்தினர் அலறல் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே, கொள்ளையர்கள் மெயின் ரோட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் ஏறி தப்ப முயன்றனர். கிராம மக்கள் துரத்தியதால், காரை விட்டு, வயல் வெளியில் புகுந்து தப்பினர்.


latest tamil newsஆத்திரமடைந்த கிராம மக்கள், கொள்ளையர்கள் கார் கண்ணாடியை உடைத்து சேதப் படுத்தினர். திண்டிவனம் போலீசார், காரை பறிமுதல் செய்தனர். அதில், கொள்ளை அடிக்கப்பட்ட, 'டிவி' மற்றும் போலி நம்பர் பிளேட்டுகள் இருந்தன.திண்டிவனம் உள்ளிட்டஐந்து இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் மற்றும் மயிலம் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

3. விழுப்புரம் ஆள் கடத்தல் வழக்கு: தாராபுரத்தில் ஒருவர் சிக்கினார்
திருப்பூர்: விழுப்புரத்தில் 'ரியல் எஸ்டேட்' உரிமையாளரை துப்பாக்கி முனையில் கடத்திய சம்பவம் தொடர்பாக, தாராபுரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து துப்பாக்கி முனையில், இருவர் காரில் (டி.என்.11.சி.4953) கடத்தி செல்லப்பட்டதாக, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு நேற்று காலை, அந்த மாவட்ட போலீசார் தகவல் அளித்தனர். இதனால், மாவட்டம் முழுவதும் தீவிரமான வாகன தணிக்கை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று காலை, 11:00 மணியளவில், தாராபுரம், பொள்ளாச்சி ரோட்டில் சென்ற சம்பந்தப்பட்ட பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். காரில், வெள்ளகோவிலை சேர்ந்த ஒரு பெண், அவரது ஏழு வயது மகள், மற்றும் சென்னையை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 32 என மூவர் இருந்தனர்.


latest tamil newsவிசாரணையில், கார்த்திக்கும், பெண்ணின் கணவர் செல்வம் என்பவரும் நண்பர்கள். இருவரையும் பெதப்பம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு அழைத்து செல்வதாக, கார்த்திக் கூறினார். இருப்பினும், மூவரையும் தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.அதில், விழுப்புரத்தில், ரியல் எஸ்டேட் உரிமையாளர் கடத்தல் விவகாரத்தில், கார்த்திக்குக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.காரை சோதனையிட்டத்தில், துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்த தகவலின் பேரில், விழுப்புரம் போலீசார் தாராபுரம் வந்தனர். அவர்களிடம் கார்த்திக்கை ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கண்டறிய, திருப்பூர் மற்றும் விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4. டாஸ்மாக்கில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது; இருவர் ஓட்டம்
உடுமலை: உடுமலை அருகே, பாலப்பம்பட்டியில், டாஸ்மாக் மதுக்கடை எண், 2342 உள்ளது. நேற்றுமுன்தினம், விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு, மேற்பார்வையாளர் நடராஜன் மற்றும் விற்பனையாளர்கள் பாலமுருகன், ரங்கநாதன், கோபால்சாமி ஆகியோர், அருகிலுள்ள அறைக்கு வந்து விட்டனர்.

இந்நிலையில், கடையின் வெளிப்பக்க கிரில் கேட் மற்றும் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மூன்று திருடர்கள், 'பீர்' எடுத்து குடித்துள்ளனர். பின்னர், விற்பனை பணம் வைத்திருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்கும் வகையில், வெளிப்புற கான்கிரீட்டை உடைத்துள்ளனர். இருப்பு பெட்டியையும் உடைக்க முயற்சித்துள்ளனர். கடையிலிருந்து சத்தம் வந்ததோடு, கடைக்கு முன், பைக் ஒன்றும் நின்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடைக்கு சென்று பார்த்த போது, மூன்று பேர் தப்பி ஓடியுள்ளனர்.


latest tamil newsஉடனடியாக அவர்களை துரத்திப்பிடிக்க முயற்சித்த போது, வயலுாரை சேர்ந்த ஜேசுதாஸ்,20, சிக்கினார். இது குறித்து மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசுதாசை கைது செய்தனர். தப்பி ஓடிய, பழநி, பாப்பம்பட்டியை சேர்ந்த, திலீப்ராஜா மற்றும் வேலுமணி ஆகியோரை தேடி வருகின்றனர். திருடர்கள் வந்த பைக் மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.டாஸ்மாக் கடையில் நடந்த திருட்டுமுயற்சியில் விற்பனை பணம் தப்பிய நிலையில், மூன்று திருடர்களுக்கும் 'பீர்' மட்டுமே கிடைத்துள்ளது.

5. பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி
கோவை:வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மனைவி சுசிலாதேவி, 45. கணவர் உயிரிழந்த நிலையில், மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுசிலாதேவி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாலிபர், குடிக்க தண்ணீர் கேட்டார்.அவருக்கு தண்ணீர் எடுத்து வந்து தந்தபோது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில், அந்த நபர்சரமாரியாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் பெண் அலறி துடித்து கீழே விழுந்ததும், அந்த நபர் அங்கிருந்து ஓடினார். உயிருக்கு போராடியவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.எஸ்.புரம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண்ணை கத்தியால் குத்தியது, அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்தியாவில் நிகழ்வுகள்:
மருத்துவ குழு மீது தாக்குதல்
பாலியா: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள பஸ்வான் சவுக் கிராமத்தில், கணஷ்யாம் என்பவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நோயாளிக்கு தேவையான மருந்துகளை வழங்கி, அவரை வீட்டில் தனிமைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, மூன்று அரசு அதிகாரிகள், இரண்டு டாக்டர்கள் அடங்கிய குழுவினர், நேற்று காரில் சென்றனர். அப்போது, அவர்களின் காரை, 60க்கும் மேற்பட்டோர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில், ஆறு பேரும் காயமடைந்தனர்.

பாக்.,கிலிருந்து வந்த கப்பலில் ரூ.3,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்
கொச்சி : பாகிஸ்தானில் இருந்து வந்த, இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி கப்பலில் இருந்து, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை, இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்த சோதனையில், அதில், 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு, 3,000 கோடி ரூபாய்.இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், கப்பலும் கொச்சி கொண்டுவரப்பட்டது.கைதானவர்களிடம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil newsஉலக நிகழ்வுகள் :-சிறுமி சுட்டுக்கொலை
சிகாகோ: அமெரிக்காவில், சிகாகோ நகரில், 'மெக்டொனால்ட்ஸ்' கடை அருகே காரில் இருந்த, ஜோன்டே ஆடம்ஸ் மற்றும் அவரது, 7 வயது மகள் ஜாஸ்லின் ஆகியோர் மீது, மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஜாஸன் உயிரிழந்தார். ஜோன்டே ஆடம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
20-ஏப்-202115:33:26 IST Report Abuse
Jayvee முதல் செய்து முகமூடி இல்லாமல் தினமும் நடக்கும் கொள்ளை. இரண்டாவது முகமூடி அணிந்து கொண்ட நடந்த கொள்ளை சம்பவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X