பொது செய்தி

தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் இன்று(ஏப்.,20) முதல், இரவு, 10:00 மணியிலிருந்து காலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, வரும், 30ம் தேதி நள்ளிரவு வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, மாநிலத்தின் அனைத்து
TN fights Corona, lockdown, curfew, ஊரடங்கு, தமிழகம்

சென்னை : தமிழகத்தில் இன்று(ஏப்.,20) முதல், இரவு, 10:00 மணியிலிருந்து காலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, வரும், 30ம் தேதி நள்ளிரவு வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இன்று முதல், இரவு, 10:00 மணியிலிருந்து காலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


latest tamil news



அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல, அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரைபகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202104:07:34 IST Report Abuse
ஆப்பு கொரோனா நைட் டூட்டி பாக்கும்னு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பகலில் அது தூங்கும். நாம வெளியில் போயிட்டு வரலாம் போலிருக்கு.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-ஏப்-202112:34:52 IST Report Abuse
S.Baliah Seer இரவு நேர ஊரடங்கு தேவையில்லாத ஒன்று.ரயில்வே விடிய விடிய டிரைன் விடுவேன் என்று சொன்ன பின்னரும் இந்த இரவு நேர ஊரடங்கு ஏன் என்று புரியவில்லை?இதனால் கொரோனா கட்டு படுகிறது என்பது பொய்யான வாதம்.
Rate this:
Cancel
venkataraman vs - madurai,இந்தியா
20-ஏப்-202112:06:17 IST Report Abuse
venkataraman vs இரவு நேர (10 pm - 4 am) ஊரடங்கினால் எந்த பலனும் கிடைக்காது. மக்கள் ஒத்துழைப்புடன் வேறு வகைகளில் முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X