இந்தியா போகாதீங்க...: கொரோனாவில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (18)
Advertisement
வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்கு மேல் பாதிப்பு பதிவாகி
US, Warns, Avoid Travel, India, Covid, Corona, கொரோனா, அமெரிக்கா, எச்சரிக்கை, இந்தியா

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்கு மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. அதேநேரத்தில் தினமும் 1700க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது இங்கிலாந்து. இந்நிலையில் இந்தியாவிற்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.


latest tamil news


இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202104:29:31 IST Report Abuse
Sundararaman Iyer Singapore is placing all passengers returning from India on quarantine for 22 days at their own expense - which is more than 3 times the airfare.................
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
20-ஏப்-202120:59:01 IST Report Abuse
naadodi தலைப்பு திருத்தம் தேவை. இது எதோ அமெரிக்காவை வீட்டா இந்தியா உயர்வு என்ற நோக்கத்தில் எழுதப்பட்டதா என புரியவில்லை. அமெரிக்காவில் கொரோனா கூடுதலாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் போல் 3 மடங்குக்கு மேல் நிலப் பரப்பு அதிகம், அமெரிக்காவில். மக்கள் தொகை அடர்த்தி இந்தியாவில் மிக அதிகம். அமெரிக்காவில் குறைவு. இதனால் இந்தியா வந்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். தயை கூர்ந்து இந்த கண்ணோட்டத்தில் நோக்குங்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஏப்-202119:41:35 IST Report Abuse
தமிழவேல் எதற்காக இதுபோன்ற தலைப்பு? இதையே பாஸிட்டிவாகப் பார்க்கக் கூடாதா? நாம் நமது நலனிற்காக விமானப் போக்குவரத்தை ரத்து செய்கின்றோம். அதுபோல, அவர்களின் நலனிற்காக தங்களது மக்களை போகவேண்டாம் என்று சொல்கின்றார்கள். இதில் முதலாவதாக இருந்தால் என்ன? இரண்டாவதாக இருந்தால் என்ன ?
Rate this:
Murugesan - San Jose,யூ.எஸ்.ஏ
20-ஏப்-202121:34:02 IST Report Abuse
Murugesanஅமெரிக்காவில் இந்தியா போன்று பொய் கணக்கு சொல்ல முடியாது மேலும் தற்பொழுது நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. சொல்லப்போனால் தோற்று பரவல் வேகத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X