பொது செய்தி

இந்தியா

கொரோனா ஒழிப்பு பணியில் ராணுவம்; ராஜ்நாத் வேண்டுகோள்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ராணுவம் ஈடுபட வேண்டும் மேலும் ராணுவ வசதிகளை நிபுணர்களை கொண்டு உதவும் பணிகளை துவக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்

புதுடில்லி: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ராணுவம் ஈடுபட வேண்டும் மேலும் ராணுவ வசதிகளை நிபுணர்களை கொண்டு உதவும் பணிகளை துவக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news



இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது:
ராணுவம், பாதுகாப்புத்துறை செயலர், டிஆர்டிஓ ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், சிகிச்சை அளிப்பதற்கான கைவசம் உள்ள வசதிகளை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். ராணுவ கமாண்டர்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யும்படி, ராணுவ தளபதி நரவானேவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.


ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை


இதனை தொடர்ந்து ராணுவ குடியிருப்புகளில் உள்ள மருத்துவமனைகளில், பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அங்குள்ள மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு செயலர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
20-ஏப்-202116:32:54 IST Report Abuse
Raj ராணுவ செலவுகள் இதக்கவைத்து பயன் படட்டும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஏப்-202112:02:58 IST Report Abuse
Ramesh Sargam சார், முதலில் கொரோனா ஒழிப்பு பணியில் மத்திய, மாநில அமைச்சர்களையும், MLA -களையும், MP -களையும், வொவொரு தொகுதி கார்போரேட்டர்களையும் மற்றும் வீணாக, வெட்டியாக சுற்றித்திரியும் அரசியல்'வியாதிகளையும்' கலத்தில் இறக்குங்கள். இப்பொழுதைக்கு ராணுவ வீரர்களை நாம் தொந்தரவு படுத்த வேண்டாம். அவர்களின் பணியே மிகப்பெரும் பணி - அதாவது நம் எதிரிகளிலிருந்து நம்மை என்னேரமும் காப்பாற்றும் பணி. ஒருவேளை, நான் மேட்கூறிய அந்த அமைச்சர்கள் கையில் எதுவும் முடியாவிட்டால், பிறகு நமது ராணுவத்தை துணைக்கு அழைப்போம்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
20-ஏப்-202111:47:10 IST Report Abuse
Nallavan Nallavan மூ-டத்தனமான யோசனை ......
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
20-ஏப்-202112:15:51 IST Report Abuse
Nallavan Nallavanராணுவத்தை இயற்கை இடர்கள் ஏற்படும் சமயத்தில் அழைக்கலாம் ..... அது அவர்களின் கடமைகளுள் ஒன்று ..... ஆனால் பெருநோய் பரவும் காலத்தில், அதுவும் எதிரிகள் பொறாமையுடன் இருக்கும் சமயத்தில் ????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X