பொது செய்தி

இந்தியா

மும்பை மசூதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்ஸிஜன்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
மும்பை: மும்பை மசூதிகளில் தொண்டு நிறுவனம் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி வருவதால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதி, மும்ப்ரா,
Mumbai, MosquesOffer, FreeOxygen, Cylinders, மும்பை, ஆக்ஸிஜன், மசூதி

மும்பை: மும்பை மசூதிகளில் தொண்டு நிறுவனம் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி வருவதால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதி, மும்ப்ரா, மீரா சாலை, கல்யாண் மற்றும் பிவாண்டி உள்ளிட்ட பல மசூதிகளில் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சித்திக் இதனை வழங்கி வருகிறார்.


latest tamil news


இது குறித்து சித்திக் கூறியதாவது: அனைத்து கொரோனா நோயாளிகளும் மருத்துவமனைகளில் படுக்கைகளை கிடைப்பதில்லை, பலர் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதால், ஆக்ஸிஜனை தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம். மதம், சாதி எதுவாக இருந்தாலும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது கடவுளின் வீடு, ஒரு புனிதமான இடம். ஒரு நல்ல முயற்சி ஒரு புனிதமான இடத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 50 படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-ஏப்-202121:00:36 IST Report Abuse
sankaseshan மதமாற்றம் செய்யாமலிருந்தால் சரி .
Rate this:
Cancel
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-202117:28:06 IST Report Abuse
Manithan வாழ்த்துக்கள்....தனக்கு மட்டும் போதும் என்று இல்லாமல் எல்லாருக்கும் இருக்கட்டும் என்ற நல்லிணக்கம்... போற்ற தக்கது...
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
20-ஏப்-202123:11:50 IST Report Abuse
SureshKumar Dakshinamurthypoi partha theriyum...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
20-ஏப்-202117:26:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ரிலையன்ஸ் நிறுவனம் நூறு டன் எடையுள்ள ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை மஹாராஷ்டிரா அரசுக்கு இலவசமாகவே தருகிறது தேசவிரோதிகளின் விஷம் கக்கும் அடிமைகளுக்காக இந்த செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X