பொது செய்தி

இந்தியா

அதிக டோஸ்கள் வீணாக்கிய மாநிலங்கள்; தமிழகம் முதலிடம்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதி முதல் 18
RTI, CovidDose, Wastage, Tamilnadu, CoronaVaccine, கொரோனா, தடுப்பூசி, டோஸ், வீண், தகவல் அறியும் உரிமை சட்டம், ஆர்டிஐ

புதுடில்லி: நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று (ஏப்.,19) அறிவித்தது. இந்நிலையில், மாநில அளவில் வீணான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.


latest tamil news



அதன்படி, ஏப்ரல் 11-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 10 கோடியே 34 லட்சம் டோஸ்களில், 44 லட்சத்து 78 ஆயிரம் டோஸ் மருந்துகள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமான டோஸ்கள் வீணாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 12.10 சதவீதமும், ஹரியானாவில் 9.74 சதவீதமும், பஞ்சாபில் 8.12 சதவீதமும், மணிப்பூரில் 7.8 சதவீதமும், தெலுங்கானாவில் 7.55 சதவீதமும் தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளது.

குறைவான அளவில் டோஸ்கள் வீணடித்துள்ள மாநிலங்களாக கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் - டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவை உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - California,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202110:37:52 IST Report Abuse
Tamilan கூட்டணி கொள்ளைக்காரங்களுக்கும்.. சாரி... கட்சிக்காரங்களுக்கும் பிரித்து கொடுத்திருந்தால் இவ்வளவு மருந்துகள் வீணாகியிருக்காது...😂😂😂😂
Rate this:
Cancel
Tamilan - California,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202110:21:10 IST Report Abuse
Tamilan இதிலும் நாம்தான் முதலிடம். வெற்றி நடை போடும் தமிழகமே....
Rate this:
Cancel
21-ஏப்-202104:29:02 IST Report Abuse
மோகனசுந்தரம் தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X