கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நதிநீர் பாதுகாப்பில் சமரசம் கூடாது: சென்னை ஐகோர்ட்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: நதிகளின் நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாக கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர்,
ChennaiHC, Rivers, Prevention Pollution, Govt, ExpertPanel, Industrial Effluents, நதிநீர், மாசு, அரசு, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம்

சென்னை: நதிகளின் நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாக கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர், குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நதிகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என தெரிவித்தது.


latest tamil news


மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‛நதிகளில் தொழிற்சாலைகள், கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் வெளியேற்றுவதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கடைமடை மக்களும் நதிநீரைப் பயன்படுத்தும் வகையில், அதன் தரத்தை பாதுகாக்க வேண்டும். நதி நீர் மாசடையும் போது, நிலத்தடி நீரும் பயன்படுத்த தகுதியற்றதாகிவிடும். நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசி காரில் செல்லும்போது கூட, துர்நாற்றம் வீசுகிறது,' எனக் கூறினர்.

அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படி தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-ஏப்-202107:37:39 IST Report Abuse
Darmavan நீரை மாசுபடுத்தினால் என்ன தண்டனை என்றும் கோர்ட் சொல்ல வேண்டும்.யார் மாசுபடுத்துகிறார்கள் என்பதை வெளியிடவேண்டும்.
Rate this:
Cancel
20-ஏப்-202118:11:04 IST Report Abuse
ஆரூர் ரங் கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரில் இல்லாத கழிவா ? அமராவதி கழிவு பற்றி திருட்டு திராவிஷர்கள் 😡போராட்டம் நடத்த மாட்டார்கள். கழிவுகளின் காரணகர்த்தாக்களே அவர்கள்தானே? ஸ்டெர்லைட் கட்டிங் தர மறுத்ததால் மூட வைத்தனர் . ஆனால் மூர்க்க தோல் ஆலைகளை பற்றி? மூச்🤐🤐
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-202116:32:43 IST Report Abuse
Kalyan Singapore கூவம் நதி பற்றி விமரிசனம் செய்யும் நீதி மன்றம் அதை தடுக்க தானாக வந்து உத்தரவு இடக்கூடாது ? யாரேனும் வழக்கு தொடுத்தால் தான் 20 வருடம் இழுக்கடித்து தீர்ப்பு கூற வேண்டுமா ? அதற்குள் கூவம் நதியே வற்றி அங்கு வீடுகள் கட்டப்பட்டு இருக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X