ஏழை, பணக்கார நாடுகளில் தடுப்பூசி ஏற்றத்தாழ்வு: கிரேட்டா தன்பெர்க் குற்றச்சாட்டு

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
வாஷிங்டன்: உலகின் பணக்கார நாடுகள் பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில் பெரும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் குற்றம்சாட்டியிருக்கிறார்.உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்தந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன.
GretaThunberg, CovidVaccine, Inequity, ClimateActivist, கிரேட்டா தன்பெர்க், கொரோனா, தடுப்பூசி, தடுப்பு மருந்து, ஏற்றத்தாழ்வு

வாஷிங்டன்: உலகின் பணக்கார நாடுகள் பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில் பெரும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் குற்றம்சாட்டியிருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்தந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், உலகளவில் பருவநிலைமாற்றம் தொடர்பான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்த கிரெட்டா தன்பெர்க், தனது அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் யூரோக்கள் (1,20,000 டாலர்) உலக சுகாதார நிறுவன அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார், இந்த தொகை ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்க உதவிசெய்யும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக கிரேட்டா கூறியதாவது: பணக்கார நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிடையே நிலவும் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள், தடுப்பூசி உருவாக்குபவர்கள் மற்றும் உலக மக்கள் முன்வரவேண்டும். உலகில் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளோருக்கு தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் நிலையில், பணக்கார நாடுகள் இப்போது இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருவது முற்றிலும் தவறானது.

அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 4 பேரில் ஒருவர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500-ல் ஒருவர் மட்டுமே தடுப்பூசியை பெற்றுள்ளனர். எனவே சர்வதேச சமூகம், அரசாங்கங்கள் மற்றும் தடுப்பூசி உருவாக்குபவர்கள், இந்த தடுப்பூசி ஏற்றத்தாழ்வு பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் வெளிநாட்டு பத்திரிக்கைகள் தங்கள் கருத்துகளை மற்ற நாடுகளின் மீது திணிக்க இது போன்ற விவரம் புரியாத சமூக சேவகர்கள் உருவாக்கப்படுவார்கள் . இவர்களுக்கு மிக பெரிய பிம்பம் தந்து எளிது காசு பார்த்து விடுவார்கள் . இந்திய மனா நலன் குன்றிய சிறுமிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது
Rate this:
Cancel
vetta velichcham - sengippatti ,இந்தியா
21-ஏப்-202107:25:10 IST Report Abuse
vetta velichcham பிஞ்சிலே பழுத்த பேரறிவாளி, மேதாவி என்று எண்ண தேவையில்லை. பிரபலத்தை காசுக்காக விற்கும் அற்ப பேர்வழி இது. இந்திய நாட்டின் எதிரி சக்திகள் காசு கொடுத்து என்ன கூவனும்னு சொன்னா கூவும் கேவல பிறப்பு இது. கொரோனா தாக்கம் இருந்த பொழுது இந்த முட்டாள், விவசாயிகள் போராட்ட கூட்டங்கள தூண்டிவிட்டு இந்தியாவில் கொரோனா பரவ காரணாமாயிருந்த மூத்த மூதேவி இது. இதோட பேச்ச கேட்டா நாடும், வீட்டில் இருக்கும் சொந்தங்களும் சுடுகாட்டுக்கு போகும்னு இப்போ தெரிஞ்சிருக்கும் பஞ்சாப் விவசாயி நாட்டாமைகளுக்கு.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
21-ஏப்-202107:21:50 IST Report Abuse
Jayvee அடுத்த மலாலா .. தீவிரவாதிகளால் வளர்க்கப்பட்ட பெண் குஞ்சுகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X