முந்திக்கொண்டு ஊரடங்கு போட்ட ஐகோர்ட்: ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தின் 5 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு போடுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை பரவல் காணப்படுகிறது. தினசரி பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பாதிப்புகளும் அதிகம் கண்டறியப்படுகின்றன. இந்நிலையில் நேற்று (ஏப்.,19) அலகாபாத் உயர்
UP_Govt, ImposingLockdown, AllahabadHC, SupremeCourt உபி, உத்தரபிரதேசம், ஊரடங்கு, அலாகாபாத், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தின் 5 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு போடுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை பரவல் காணப்படுகிறது. தினசரி பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பாதிப்புகளும் அதிகம் கண்டறியப்படுகின்றன. இந்நிலையில் நேற்று (ஏப்.,19) அலகாபாத் உயர் நீதிமன்றம், உ.பி.,யில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கையாள மாநில மருத்துவ கட்டமைப்புகளால் இயலாது என கூறியது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய 5 நகரங்களுக்கு ஏப்.,26 வரை ஒரு வார முழு ஊரடங்கு அறிவித்து உத்தரவிட்டது.


latest tamil news


அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உ.பி., மாநில அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவு மிகப்பெரிய நிர்வாக சிக்கல்களை உருவாக்கும். ஊரடங்கு சரியான அணுகுமுறை இல்லை. உயிர்களையும் காக்க வேண்டும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என வாதாடியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக அளிக்க உ.பி., அரசுக்கு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
21-ஏப்-202110:06:10 IST Report Abuse
sundaram sadagopan முழு ஊரடங்கா அல்லது வாழ்வாதாரமா எனும் கேள்விக்கு அரசாங்கங்கள் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றன. GDPயை, 2021-22 இல் 11.4% எடுத்து செல்லும் நோக்கத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு கொரோன ஒரு இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது . இந்த சமயத்தில் சுப்ரீம் கோர்ட் செய்தது சரிதான் , ஆனால் சில சமயத்தில் அரசாங்க அதிகாரிகள் மெத்ததனத்தில் நடந்து கொண்டால் அதை போக்க சில சமயம் நடவடிக்கை எடுப்பது கோர்ட்டுகள் தானே . எத்தனையோ முறை ஹைகோர்ட் மதுரை கிளை அரசாங்க அதிகாரிகளை சுருருப்பாக வேலை செய்ய வைத்திருக்கின்றது .எனவே அலகாபாத் ஹைகோர்ட்டை இந்த விவகாரத்திற்க்காக கண்டிப்பது சரியல்ல.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
21-ஏப்-202107:23:51 IST Report Abuse
Jayvee நீதிபதிகளும் மனிதர்கள்தானே.. யாருக்குத்தான் மீடியா பபிளிசிட்டிக்கு ஆசை இருக்காது..
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
21-ஏப்-202107:08:07 IST Report Abuse
MANIAN K இந்த வழக்கை போட்ட புண்யவான் யார் ? கான் கிராஸ் திருடனா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X