பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறினால் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: ஊரடங்கை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும். ஞாயிறு தோறும் முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.இந்நிலையில், சென்னை போலீஸ்
சென்னை, போலீஸ், ஊரடங்கு, கமிஷனர், மகேஷ்குமார், மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: ஊரடங்கை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும். ஞாயிறு தோறும் முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.


latest tamil news



இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கில் வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். சென்னையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இரவு நேரத்தில் மேம்பாலங்கள் மூடப்படும். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் செல்வோர்கள் பயணச்சீட்டை காண்பித்து செல்லலாம். தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-202100:24:21 IST Report Abuse
g.s,rajan அது சரி இரவு நேர பணிக்குச் செல்பவர்கள் ஷிப்ட் முறையில் தொழிற்சாலைகளில் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ,ஞாயிற்றுக் கிழமைகளில் பணியாற்றுபவர்களை எப்படி டார்ச்சர் செய்யப் போகிறீர்கள் ,ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு என்றால் அவர்கள் பணிக்கு எப்படி செல்வார்கள்,இல்லை அவர்களுக்கு விடுமுறை விடச் சொல்லி அரசாங்கம் வலியுறுத்துமா ???புரியவில்லை இல்லை செல்லும் வழிகளில் லத்தியால் அவர்களுக்கு அடிகிடைக்குமா,காவல்துறையினர் அவர்களை ஒருமையில் அழைத்து திட்டுவார்களா இல்லை குற்றவாளிகளைத் துரத்துவது போல ஓடஓட விரட்டுவார்களா ??ஒன்றும் புரியவில்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
20-ஏப்-202121:00:20 IST Report Abuse
ஆப்பு யார் ஊரடங்கினாலும் போலீஸ் ஊரடங்காது. எல்லோரும் ஊர்டங்கிட்டாங்களான்னு இவிங்க சுத்தி சுத்தி வருவாங்க. கேட்டா ரோந்துப் பணிம்பாங்க.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஏப்-202120:10:12 IST Report Abuse
Ramesh Sargam ஊரடங்கை யார் மீறினாலும் நடவடிக்கை எடுப்பீர்களா? நாளை, ஒருவேளை நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுக்கப்பட்டவர் யாராவது அரசியல்வாதியின் உதவியை பெற்று தண்டனையில் இருந்து தப்பிக்க முயச்சித்தால், என்ன செய்வீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X