பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்படும்போது வதந்தி பரவுவது வாடிக்கையாக உள்ளது. கிராமப்புறங்களிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்திற்கு கூடுதலாக 6
தமிழகம், தடுப்பூசி, அமைச்சர், விஜயபாஸ்கர்,

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்படும்போது வதந்தி பரவுவது வாடிக்கையாக உள்ளது. கிராமப்புறங்களிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. விரைவில் 5 லட்சம் டோஸ் கோவாக்சின் வருகைக்காக காத்திருக்கிறோம். தடுப்பூசி வீணாகாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு என்பது இல்லை. இனியும் இருக்காது. தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 32,405 படுக்கைகள் உள்ளன. அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனைக்கு செல்வதால் படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
21-ஏப்-202112:01:52 IST Report Abuse
Srinivas இன்னுமா இவனுங்களை மக்கள் நம்புறாங்க....கொடுமை....மிக கொடுமை....
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
21-ஏப்-202111:48:37 IST Report Abuse
Srinivas குட்கா சாப்பிட்டால் கொரோனா போய்விடும் என்று சொன்னாலும் சொல்வானுங்க. குட்கா வழக்கில் நேரடியாக ஈடுபட்டும் ரைடு நடந்தும் எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் தமிழகத்தை சூறையாடிகிட்டு இருக்கானுங்க. மத்திய கும்பல் நல்ல ஒத்துழைப்பு.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
21-ஏப்-202111:46:26 IST Report Abuse
Srinivas வாய் கூசாமல் பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் கொள்ளைக் கும்பல் கூட்டம். இவனுங்க மொத்த கூட்டமும் கோமாளிப்பயலுக கும்பல்...வெளியிடும் செய்திக்கு முற்றிலும் மாறாக இருப்பதுதான் நிதர்சனமான நிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X