முழு ஊரடங்கை அறிவிக்க கோரி உத்தவ்விற்கு அமைச்சர்கள் நெருக்கடி

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதல்வர் உத்தவ் அறிவிக்க வேண்டும் இரண்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் இரண்டாம் அலை நாட்டை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில்இரவு ஊரடங்கும், கடும் கட்டுப்பாடுகளை அரசுவிதித்துள்ளது. மஹாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவிற்கு 60
 முழு ஊரடங்கு,  உத்தவ்,அமைச்சர்கள் நெருக்கடி

மும்பை: மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதல்வர் உத்தவ் அறிவிக்க வேண்டும் இரண்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் இரண்டாம் அலை நாட்டை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில்இரவு ஊரடங்கும், கடும் கட்டுப்பாடுகளை அரசுவிதித்துள்ளது. மஹாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவிற்கு 60 ஆயிரத்திற்கும் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.


latest tamil news





உத்தவ் முடிவு


இந்நிலையில் மஹாராஷ்டிராவில் நிலைமை மிகமவும் மோசமான நிலைக்கு சென்று விட்டதால்,தொற்று பரவலை கட்டுப்படுத்திட நாளை இரவு 8 மணி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்திட வேண்டும். விரைவில் முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என அம்மாநில மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பேசிய மற்றாரு அமைச்சர் அஸ்லம் ஷேக் , மாநிலத்தில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை மேலும் மோசமடைவதை தடுத்திட, உயிரிழப்பை தவிர்க்க முழு ஊரடங்கு அவசியம். முதல்வர் தான் விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-202109:17:54 IST Report Abuse
Ramaraj P ப.சி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தான் ராஜ்யசபா அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன் மாநிலத்திக்காக என்ன செய்துள்ளார்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஏப்-202120:01:43 IST Report Abuse
Ramesh Sargam முழு ஊரடங்கு அறிவிப்பதில் இந்த உத்தவுக்கு என்ன பிரச்சினையோ...? மாநில மக்களின் மீது அவ்வளவுதான் அக்கறையா..?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஏப்-202119:07:45 IST Report Abuse
M  Ramachandran சிதம்பரம் ஒரு பச்சோந்தி. பதவியில் இருந்த போது சொந்த பந்தங்களுக்கு கோடீஸ்வரகளாக உதவியவர் என்றுமே தமிழர்களுக்காக குரல் கொடுத்த தில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X