பொது செய்தி

இந்தியா

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு: 180 நாடுகளில் இந்தியாவுக்கு 142-வது இடம்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
புது டில்லி: 'எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவனையில், இந்தியா 142-வது இடத்தை இந்தாண்டும் தக்க வைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறியுள்ளது.180 நாடுகள் பட்டியல்பத்திரிகை சுதந்திரம் பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க்

புது டில்லி: 'எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவனையில், இந்தியா 142-வது இடத்தை இந்தாண்டும் தக்க வைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறியுள்ளது.



latest tamil news




180 நாடுகள் பட்டியல்



பத்திரிகை சுதந்திரம் பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3-ம் இடங்கள் பிடித்துள்ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான சீனா 177-வது இடத்திலும், பாகிஸ்தான் 145, நேபாள் 106, இலங்கை 127, வங்கதேசம் 152-ம் இடமும் பெற்றுள்ளன.


latest tamil news




இந்தியாவானது பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என அந்த அமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

எந்த ஒரு பத்திரிகையாளர் இந்தியாவில் விமர்சனங்களை வைத்தாலும் பா.ஜ.க., ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என மிரட்டப்படுவதாக என அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி ஊடகங்கள் மீதான தனது பிடியை இறுக்கி வருகிறார். 2020-ல் நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணிக்காக இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஏப்-202112:33:30 IST Report Abuse
Sridhar இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்திற்கு குறைவில்லை, பார்க்கப் போனால் பொறுப்பற்றத்தனத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், பத்திரிக்கையாளர்களின் தரம் தான் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவர்கள் மோடியின் மீது இருக்கும் வெறுப்பில் இந்தியாவை எதிர்க்கிறார்களா அல்லது இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பில் மோடியை எதிர்க்கிறார்களா என்பதே பெரும் கேள்விகுரியாக இருக்கும் நிலையில், இவர்களின் செயல்களின் விளைவுகளை தெரிந்தே செய்கிறார்களா இல்லை இவர்களுக்கென்று ஏதாவது கொள்கைகள் ஏதாவது இருக்குமா என்பதும் ஒரு சந்தேகமாகவே இருக்கிறது. இந்த லட்சணத்தில், வெளியூர்காரன் எதைகண்டானோ, இவர்களுக்கு சுதந்திரம் பத்தாது என்று கூறுகிறான் சமூக வலைத்தளங்களில் கூட அரைவேக்காடுகள் பிரதமரை கண்டபடி ஏசி எழுதுவதை காணும் நம் நாட்டில், பிரதமரையே ஒரு 'மனநோயாளி' என ஒரு சிறு மாநில முதல்வர் கூறமுடியும் இந்த நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என கூறுவதை என்னவென்று எடுத்துக்கொள்வது? இவர்களுக்கு என்னதான் வேண்டுமாம்? இந்தியா பிளவுபட்டு இங்கு அன்பு மார்க்கம் ஆட்சி செலுத்தும்வரை அவ்வாறு கூறிக்கொண்டே இருப்பார்களோ?
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
21-ஏப்-202112:18:49 IST Report Abuse
Anand இந்தியாவிற்கு எதிரா செயல்படும் இந்த மாதிரி கேடுகெட்ட அமைப்புக்கு முட்டுக்கொடுக்க மதம்மாறி கைக்கூலி கூட்டம் வரிசையில் வருவானுங்க ...
Rate this:
Cancel
கிராமத்தான்,Coimbatore - Dallas,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202111:48:26 IST Report Abuse
கிராமத்தான்,Coimbatore கோடி மீடியா. டிஜிட்டல் இந்தியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X