பொது செய்தி

இந்தியா

மும்பையில் தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைவு

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021
Share
Advertisement
மும்பை: கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 7,000 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 7 ஆயிரத்து 381 பேர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு 11,463 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏப்ரல் 12-ஆம் தேதிவரை தொடர்ந்து 8,500 பேர் சராசரியாக ஒரு நாளில் வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்துவந்த

மும்பை: கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 7,000 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 7 ஆயிரத்து 381 பேர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



latest tamil news



கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு 11,463 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏப்ரல் 12-ஆம் தேதிவரை தொடர்ந்து 8,500 பேர் சராசரியாக ஒரு நாளில் வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்துவந்த நிலையில் நேற்றும், இன்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் மும்பையில் இதுவரை 5.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகரில் 47 ஆயிரம் பேருக்கு ஒரு நாளில் வைரஸ் பரிசோதனையை இந்த மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.


latest tamil news




குணமடையும் சதவீதம் அதிகரிப்பு



இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வைரஸ் தாக்கத்திலிருந்து குணமாகும் சதவீதம் 83 ஆக தற்போது உயர்ந்துள்ளது என்றனர். அதேசமயம் குணமாவோர் விகிதம் 1.46 ஆக உள்ளது. மும்பை சேரிப் பகுதிகளில் 106 பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளதாகவும், 1171 அடுக்குமாடி கட்டடங்களுக்கு வைரஸ் தாக்கம் காரணமாக சீல் வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X