சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 பேர் பலியான விவகாரம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வேலுார்:வேலுார் அரசு மருத்துவமனையில், ஏழு பேர் பலியானது குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏழு பேர், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். 'ஆக்சிஜன்' சப்ளையில் ஏற்பட்ட குளறுபடியால், அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். கலெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை

வேலுார்:வேலுார் அரசு மருத்துவமனையில், ஏழு பேர் பலியானது குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏழு பேர், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். 'ஆக்சிஜன்' சப்ளையில் ஏற்பட்ட குளறுபடியால், அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். கலெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி, 'ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை' எனக் கூறினார்.

பின், ஏழு பேர் இறப்புக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு, நேற்று வேலுார் அரசு மருத்துவமனைக்கு வந்து, ஆக்சிஜன் பிளான்டை பார்வையிட்டார். சம்பவம் நடந்த போது, பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, ஏழு பேர் இறந்த சம்பவம் குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதன்படி, மருத்துவமனை, 'டீன்' செல்வி தலைமையில், 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா வார்டு, சிறப்பு வார்டுகளுக்கு செல்லும் ஆக்சிஜன் பைப் லைன் ஐஸ் கட்டியாக உறைந்ததை அகற்றி விட்டு, புதிதாக மாற்றப்பட்டு, ஆக்சிஜன் கசிவு நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202114:56:55 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இது ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேடு.. முழுக்க முழுக்க அதிகாரகளின் அடிச்சியமே காரணம்.. ஆக்ஸிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டு உண்டான கோளாறு..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
21-ஏப்-202106:56:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி மோடி ஆட்சியிலே சமையல் வாயுவுக்கும் பிரச்சினை, பிராண வாயுவுக்கும் பிரச்சினை.. கோபர் கேஸ் மட்டும் தான் ஃப்ரீ..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
21-ஏப்-202106:55:49 IST Report Abuse
மதுரை விருமாண்டி "ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை" - காத்திலே 21% ஆக்சிஜன் இருக்குல்லே. அதை சொல்றாரு.. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கான்னு கேள்வி கேளுங்க.. ஆமாம் இருக்குன்னு பதில் சொல்வாரு.. தட்டுப்பாடு இருக்குன்னு சொல்றாரு ஆனா என்னமோ சிலிண்டர் இருக்குங்குற மாதிரி பேசுவாரு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X