சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழ்: ஆசிரியை 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராணிப்பேட்டை:போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, 22 ஆண்டுகள் பணியில் இருந்த ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, ஓச்சேரி அரசு துவக்கப் பள்ளியில் ஷோபனா, 45, என்பவர், 1999 முதல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 2020ல் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று, மின்னல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.அவரது மதிப்பெண் சான்றிதழ்கள்,

ராணிப்பேட்டை:போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, 22 ஆண்டுகள் பணியில் இருந்த ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, ஓச்சேரி அரசு துவக்கப் பள்ளியில் ஷோபனா, 45, என்பவர், 1999 முதல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 2020ல் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று, மின்னல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.அவரது மதிப்பெண் சான்றிதழ்கள், பரிசோதனைக்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரியவந்தது.இது குறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, ஷோபனாவை, 'சஸ்பெண்ட்' செய்து, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202112:16:11 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இருபத்தி இரண்டு வருஷம்.. லஞ்சம் மட்டும் உடனாய் வேண்டும்.. நல்ல தரம்கெட்ட அரசு அதிகாரிகள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X