முழு முடக்கம் என்பது கடைசி ஆயுதமே: பிரதமர் மோடி உரை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: மக்கள் நினைத்தால் கொரோனா இரண்டாம் அலையை முறியடிக்க முடியும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரபல டாக்டர்களுடன், மருத்து நிபுணர்களுடனும், தடுப்பூசி
Prime Minister Narendra Modi will address the nation on the COVID-19 situation at 8:45 this evening மக்கள், கொரோனா இரண்டாம் அலை,முறியடிக்கலாம்,  மோடி உரை

புதுடில்லி: மக்கள் நினைத்தால் கொரோனா இரண்டாம் அலையை முறியடிக்க முடியும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரபல டாக்டர்களுடன், மருத்து நிபுணர்களுடனும், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடியதாவது:


latest tamil news* கொரோனா இரண்டாம் அலையால் நாம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்போதைய பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியும்.

* மக்களின் வலியை நான் நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் கஷ்டத்தில் நானும் பங்கேற்கிறேன்.

* இது போன்ற சூழ்நிலையில் நாம் முன்கள பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

* நம்முடைய பொறுமையை நாம் ஒரு போதும் இழுந்துவிடக்கூடாது.

*நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* கடந்தாண்டை போன்ற மோசமான நிலை தற்போது இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய ,மாநில அரசுகளுடன் மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

*நாட்டில் மிகப்ரெிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. நாம் கவலைப்பட தேவையில்லை.

*தடுப்பூசி உற்பத்தியை அதிகாரிக்க மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து பேசி வருகிறேன். உலகிலேயே மிகக்குறைந்த விலையில் தடுப்பூசி நம் நாட்டில் கிடைக்கிறது. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

*ஆக்ஸிஜன், மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைக்க சிறப்பு முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. ஏழை, எளிய ,நடுத்தர மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும்.

* நாட்டு மக்கள் நினைத்தால் கொரோனா இரண்டாம் அலையை முறியடிக்க முடியும். நாட்டில் தற்போது தேவை கூட்டு முயற்சிதான். நாம் தைரியத்துடன் போராட வேண்டும். பொறுமையை இழந்துவிடக்கூடாது.

*அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நாம் கட்டுப்படுவதன்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

*கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
* முழு முடக்கம் என்பது கடைசி ஆயுதமே. மாநில அரசுகள் அதை கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
* நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையிலும், உயிர்ப்பலியை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
*போர்க்கால அடிப்படையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
* மக்கள் அந்தந்த பகுதிகளில் குழுக்கள் அமைத்து கொரோனா பரவாமல் தடுக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-ஏப்-202100:47:06 IST Report Abuse
Mirthika Sathiamoorthi நான் சின்னவயசுல ஒரு கதை படித்தேன்...ஒரு குட்டை இருக்குமாம் அதில் மூணு மீனு இருந்துச்சாம் ஒன்னு பெயர் வருமுன் காப்போம், இன்னொன்னு வந்தபின் காப்போம், மூணாவது மீன் வருங்கால் காப்போம்...அந்தப்பக்கமா போனா மீனவன் அதுங்களோட உடல் பருமனை பாத்துட்டு நாளைக்கு பெரிய வலையோட மூணையும் பிடிக்கநும்ன்னு பேசிக்கொண்டான்..அதைக்கேட்ட வருமுன் காப்போம் இப்பவே ஏரியிலிருந்து குட்டைக்கு நீர் வரும் வழியில் ஓடிடலாம்ன்னு சொல்லுச்சு..மற்ற ரெண்டும் அதை காதுகொடுத்தே கேக்கல..போங்கடான்னு வருமுன் காப்போம் ஏரிக்கு ஓடிடுச்சு...அடுத்தநாள் வந்த மீனவன் ரெண்டுமீனை வலைபோட்டு பிடிச்சான்..வந்தபின் காப்போம் அப்புடியே செத்த மாதிரி கிடைக்க வலையிலிருந்து அந்த மீனை எடுத்து குட்டையில் வீச, விட்டேன் பாரு ஓட்டம்ன்னு ஒரே ஓட்டமா ஓடி ஏரிக்குள் போயிடுச்சு வந்த பின் காப்போம்...ஆனா வருங்கால் காப்போம் என்ன பண்றதுன்னு புரியாம சிக்கி கடைசியில் சட்டி குழம்புக்குள்ள மீன் துண்டா போயிடுச்சு... கதையின் நீதி...பிஜேபியின் அரசு இந்த கதையில் எந்த மீன்வகையை சேர்ந்தது?
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
20-ஏப்-202123:27:28 IST Report Abuse
PANDA PANDI இதற்க்கு மக்கள் நினைக்கவேண்டும். மற்றவற்றிற்கு நீங்கள் மட்டும் நினைத்தால் பொதுமல்லவா. அதான் விவசாய சட்டம். நல்லாயிருக்கு.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-202123:26:35 IST Report Abuse
Mani . V எது முழு அடக்கமா? ஓ, ஸாரி முடக்கமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X