பொது செய்தி

இந்தியா

மேலும் 2.59 லட்சம் பேர் பாதிப்பு 10 மாநிலங்களில் 77 சதவீதம் பதிவு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:கடந்த, 24 மணி நேரத்தில், 2.59 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 77 சதவீதம் பேர், தமிழகம் உட்பட, 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கொரோனா பரவல் நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்ட அறிக்கை:கொரோனா பரவல் இரண்டாம் அலை, படிப்படியாக தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில், 2.59 லட்சம் பேரிடம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 77
 மேலும் 2.59 லட்சம் பேர் பாதிப்பு  10 மாநிலங்களில் 77 சதவீதம் பதிவு

புதுடில்லி:கடந்த, 24 மணி நேரத்தில், 2.59 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 77 சதவீதம் பேர், தமிழகம் உட்பட, 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கொரோனா பரவல் நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்ட அறிக்கை:

கொரோனா பரவல் இரண்டாம் அலை, படிப்படியாக தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில், 2.59 லட்சம் பேரிடம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 77 சதவீதம் பேர் தமிழகம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி, கர்நாடகா உட்பட, 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.மஹாராஷ்டிராவில் மட்டும், 58 ஆயிரத்து, 924 பேரிடம், பாதிப்பு உறுதியாகி உள்ளது.

உ.பி.,யில், 28 ஆயிரத்து, 211; டில்லியில், 23 ஆயிரத்து, 686 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 20.32 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், சர்வதேச அளவில் நாம் முன்னிலையில் உள்ளோம். நேற்று ஒரே நாளில், 32.76 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகள், மக்களைச் சென்றடைந்துள்ளன. இதுவரை, 10.96 கோடி பேருக்கு முதல் டோஸ், 1.75 கோடி பேருக்கு இரு டோஸ் என, 12.74 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


ஒரு நாள் பலி 1,761 பேர்

கடந்த, 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 2.59 லட்சம் பேருடன், இதுவரை தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 1.53 கோடியை கடந்துள்ளது. இவர்களில், 1.31 கோடிக்கும் மேலானோர் குணமடைந்து உள்ளனர். வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில், மஹாராஷ்டிராவில், 351 பேர், டில்லியில், 240; சத்தீஸ்கரில், 175; உத்தர பிரதேசத்தில், 167; கர்நாடகாவில், 146; குஜராத்தில், 117 பேர் இறந்துள்ளனர்.

பஞ்சாபில், 83; மத்திய பிரதேசத்தில், 79; ராஜஸ்தானில், 53; ஜார்க்கண்டில், 46; தமிழகத்தில், 44 மற்றும் பீஹாரில், 41 பேர் உட்பட, 1,761 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 530 ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X