தடுப்பூசி இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு?

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்து இறக்குமதிக்கு, மத்திய அரசு, சுங்க வரி விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மாத இறுதியில், ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி மருந்து இறக்குமதியாக உள்ளது. அனுமதிஇதன் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை, டாக்டர் ரெட்டீஸ் லேப்
 தடுப்பூசி இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு?

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்து இறக்குமதிக்கு, மத்திய அரசு, சுங்க வரி விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மாத இறுதியில், ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி மருந்து இறக்குமதியாக உள்ளது. அனுமதிஇதன் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை, டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினமும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த, வரும், மே 1 முதல், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதித்து உள்ளது.இதனால், தடுப்பூசி மருந்திற்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அமெரிக்காவின், 'பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன்' உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசி மருந்திற்கு, அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு தற்போது, 10 சதவீதம் சுங்க வரி, 16.5 சதவீதம், ஐ.ஜி.எஸ்.டி., மற்றும் சமுக நல கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. பரிசீலிக்கப்படும்இறக்குமதியாகும் தடுப்பூசி மருந்துகள், வெளிச் சந்தையில் விற்க அனுமதிக்கப்படும் என்பதால், அவற்றின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, கொரோனா தடுப்பூசி மருந்து இறக்குமதிக்கு, சுங்க வரி விலக்கு அளிப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், சுங்க வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தால், அதை மத்திய அரசு ஏற்று, உத்தரவு பிறப்பிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
21-ஏப்-202105:20:50 IST Report Abuse
Raman உயிர் காக்கும் மருந்தில் கூட வியாபாரமா ? எப்படி உருப்படும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X