5 நகரங்களில் ஊரடங்கு உச்ச நீதிமன்றம் தடை

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேசத்தில், லக்னோ உள்ளிட்ட ஐந்து நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால், லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய நகரங்களில், வரும் 26 வரை,
 5 நகரங்களில் ஊரடங்கு  உச்ச நீதிமன்றம் தடை

புதுடில்லி:உத்தர பிரதேசத்தில், லக்னோ உள்ளிட்ட ஐந்து நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால், லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய நகரங்களில், வரும் 26 வரை, முழு ஊரடங்கை அமல்படுத்தும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், உ.பி., அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. உ.பி., அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஐந்து நகரங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், பெரிய அளவில் நிர்வாக சிக்கல் ஏற்படும். மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், ஐந்து நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் உத்தரவுக்கு, தடை விதித்தனர். விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X