பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுதும் இரவு நேர ஊரடங்கு அமலானது

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும்
lockdown, curfew, TN fights Corona

சென்னை : தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் இரவு 10:00 மணியிலிருந்து காலை 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


latest tamil news


அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இரவு 10 மணிக்கு முன்பே மூடப்பட்டது.

தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது: இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கால் தமிழகம் மற்றும் கேரளாவில் ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம் போல ரயில்கள் இயங்கும். சென்னையில் புறநகர் மின்சார ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படும்.ரயில் நிலைய வளாகங்களுக்கு இரவு 10:00 மணியில் இருந்து அதிகாலை 4:00 மணி வரை வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ தேவைகளுக்கு வாடகை ஆட்டோ, டாக்கி மற்றும் தனியார் வாகனங்கள் நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கப்படும். நிலையத்திலும் ரயிலிலும் பயணியர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லையேல் 500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.
முகக்கவசம் அணியாத பயணியரை பிடித்து அபராதம் வசூலிக்க ரயில்வே பாதுகாப்பு படையினரால் தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.நிலையத்திலும், ரயிலிலும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரம் காக்கவும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
21-ஏப்-202114:49:42 IST Report Abuse
விமர்சகன் கோயிலுக்கு போகக்கூடாது ஆனால் டாஸ்மாக் போகலாம் 10 லட்சம் பேர் கூடும் கும்பமேள நடக்கும் ஆனால் சித்திரை திருவிழா கூடாது மாநிலத்தையும் நாட்டையும் ஆளும் தலைவர்கள எப்படி இருக்கின்றனர் பார்த்தீர்களா. இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுக்காதீர் இந்திய தலைவர்கள் நல்ல வாய் பேச்சு உடையவர்கள் ஆனால் இதயம் அப்படி அல்ல அதிகாரத்தை யாருடனும் பகிர மாட்டார்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார் என நள்ளிரவு சுதந்திரம்(இந்த புத்தகம் எங்கு கிடைத்தாலும் வாங்கி படியுங்கள் பல உண்மைகள் தெரியும் .) புத்தகத்தில் படித்தேன் அது எந்தளவுக்கு . . . .
Rate this:
Cancel
sri - COIMBATORE,இந்தியா
21-ஏப்-202111:35:22 IST Report Abuse
sri தினமலர் நாளிதழுக்கு ஒரு வேண்டுகோள் ...முழு ஊரடஙகு அன்று திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது...சுப காரியம் ஞாயிறு அன்று நடக்கும் போது உறவினர்கள் எவ்வாறு வருவார்கள்..அன்று காவல்துறை இரு சக்கர வாகனத்தில் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வர அனுமதிப்பார்களா.. தெளிவுபடுத்தவேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-ஏப்-202106:41:39 IST Report Abuse
M  Ramachandran இது கண் துடைப்பு ஊரடஙகு. ஞாயிறு ஊரடஙகு பரவாயில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X