மனித உயிர் தான் முக்கியம் :டில்லி ஐகோர்ட் கண்டிப்பு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 'பொருளாதார நலனுக்காக, மக்களின் உயிர் பறி போக அனுமதிக்க முடியாது; உடனடியாக தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜனை, கொரோனா நோயாளிகளுக்கு அனுப்ப வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா சிகிச்சை தொடர்பான பொதுநல வழக்கில், மத்திய அரசு சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டில்லியில்,
மனித உயிர், ,டில்லி ஐகோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: 'பொருளாதார நலனுக்காக, மக்களின் உயிர் பறி போக அனுமதிக்க முடியாது; உடனடியாக தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜனை, கொரோனா நோயாளிகளுக்கு அனுப்ப வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை தொடர்பான பொதுநல வழக்கில், மத்திய அரசு சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டில்லியில், கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை திடீரென அதிகரித்துள்ளதாகவும், இதையொட்டி, பி.எம்.,கேர்ஸ் நிதியத்தின் உதவியால், ஆக்சிஜன் தயாரிக்க, எட்டு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் சப்ளைக்கு, 22ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, விபின் சங்கி தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை உள்ளது. இத்தகைய சூழலில், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் அவசியமா? அவை, உற்பத்தியை குறைத்துக் கொள்ளக் கூடாதா? ஊரடங்கு தொடர்ந்தால் நாடே ஸ்தம்பித்து விடும். அப்போது தயாரிக்கும் உருக்கு, பெட்ரோல், டீசல் ஆகியவை யாருக்கு தேவைப்படும்?

பொருளாதார நலனுக்காக மக்களின் உயிரோடு விளையாட அனுமதிக்க முடியாது. தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் சப்ளைக்கு தடை விதிக்க ஏன், 22ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். உடனடியாக தடை விதிக்க உத்தரவிடலாமே. தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்தால், ஏராளமான மக்களின் உயிர் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202120:10:23 IST Report Abuse
ஆப்பு உரத் தொழிற்சாலைகளில் யூரியா உற்பத்தியை முடக்கி, அங்கே உற்பத்தி செய்யபடும் ஆக்சிஜனை சுத்தப்படுத்தி அனுப்பலாம்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
21-ஏப்-202119:43:34 IST Report Abuse
venkatan அதேபோல்,தேர்தலை ஆறு மாதங்கள் ஒத்தி போட உத்திரவிட்டிருக்கலாம் அல்லவா?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-ஏப்-202111:06:08 IST Report Abuse
vbs manian தொழிற்சாலைக்கு பதில் மக்களுக்கு ஆக்சிஜனை கொடு என்கிறார்கள். சரி.ஆக்சிஜென் இல்லாமல் தொழிற்சாலை மூடப்படும் . தொழிலாளர்களுக்கு வேலை போகும். பட்டினி அவர்களை வாட்டும். உயிரும் போகலாம். அப்போது என்ன சொல்வார்கள். ஆகவே ஆக்சிஜென் உற்பத்தி மிக மிக பெறுக வேண்டும்.தேவையான கட்டமைப்பு நிதி இல்லையென்றால் என்ன செய்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X