பொது செய்தி

இந்தியா

'2ம் அலையில் தீவிரமில்லை': ஐ.சி.எம்.ஆர்.,

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்கும் இடையேயான உயிரிழப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் இல்லை என்றாலும், இரண்டாம் அலையின் தீவிரம் குறைவாகவே உள்ளதாக, ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளுக்கு இடையிலான ஒப்பீடுகளை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்
2ம் அலை, தீவிரமில்லை, ஐ.சி.எம்.ஆர்.,

புதுடில்லி :கொரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்கும் இடையேயான உயிரிழப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் இல்லை என்றாலும், இரண்டாம் அலையின் தீவிரம் குறைவாகவே உள்ளதாக, ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளுக்கு இடையிலான ஒப்பீடுகளை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:இரண்டாம் அலையில், அறிகுறிகள் அற்ற கொரோனா நோயாளிகள், அதிக எண்ணிக்கையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.முதல் அலையின் போது, வறட்டு இருமல், மூட்டு வலி, தலைவலி, அசதி, தசை வலி, தொண்டை வலி, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகள் அதிகம் இருந்தன.

இரண்டாம் அலையில், பெரும்பாலானவர்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படவில்லை. அதிகம் பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே தான், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், 30 - 45 வயது வரையிலானவர்கள் பாதிக்கப்படுவதில், இரண்டு அலைக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை.

உயிரிழப்பு விகிதங்களிலும், இரண்டு அலைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், முதல் அலையை விட, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை சற்று குறைவாகவே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
21-ஏப்-202120:55:26 IST Report Abuse
J.Isaac கொரனோவை உருவாக்கி பரப்பிய சீனாவை பற்றி ஊடங்களில் செய்தி வருவதேயில்லை.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
21-ஏப்-202119:39:32 IST Report Abuse
venkatan மீயூட்டேஷன் ஆக ஆக வைரஸ்கள் மனிதனிடம் போட்டி போட்டு தோற்கப்போகிறது என்று அர்த்தம்?
Rate this:
Cancel
21-ஏப்-202117:42:24 IST Report Abuse
ஆப்பு ஒரு நாளைக்கு 2 லட்சம், 3 லட்சம்னு புது உச்சத்தை தொடுகிறோமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X