கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கணக்காளர் பணி தேர்வில் முறைகேடு: நடவடிக்கை பற்றி பதிலளிக்க உத்தரவு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை:நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர் பணி தேர்வில், நடந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், 'நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர் பணி நியமனத்தில், 2016 முதல், நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு

சென்னை:நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர் பணி தேர்வில், நடந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், 'நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர் பணி நியமனத்தில், 2016 முதல், நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டது. மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் ஆஜரானார். தலைமை கணக்காளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது; 16 பேரின் தேர்ச்சி, ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அரசு உத்தரவு பிறப்பிக்கும்,'' என்றார்.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ''முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள், பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு குற்றச்சாட்டு 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து, அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் மாதத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X