கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கீழமை நீதிமன்றங்களில் இனி 'ஆன்லைன்' விசாரணை தான்!

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வழக்குகளின் விசாரணையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும்' என, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், இன்று முதல், சிவில், கிரிமினல், கிரிமினல் மேல்முறையீடு வழக்குகள், இதர வழக்குகள் மற்றும் ஜாமின்

சென்னை:'கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வழக்குகளின் விசாரணையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும்' என, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், இன்று முதல், சிவில், கிரிமினல், கிரிமினல் மேல்முறையீடு வழக்குகள், இதர வழக்குகள் மற்றும் ஜாமின் மனுக்களை, நேரடியாக தாக்கல் செய்வது நிறுத்தப்படுகிறது. மனுக்களை தாக்கல் செய்ய விரும்பும் வழக்கறிஞர்கள், அவற்றை எஸ்பிளனேடு நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டு உள்ள, பெட்டியில் போட வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் முறையாக இருக்கும் மனு, விசாரணைக்கு ஏற்கப்படும். மனு நிராகரிக்கப்பட்டால், அதே பகுதியில் பணியில் இருக்கும், நீதிமன்ற ஊழியர் வாயிலாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவசரமான சிவில் வழக்குகளை தாக்கல் செய்யும் போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வழக்கை நடத்த விரும்புகிறீர்களா அல்லது நேரடியாக வழக்கை நடத்த விரும்புகிறீர்களா என்ற, விபரத்தை தெரிவிக்க வேண்டும்.

நேரடியாக வழக்கை நடத்த விரும்பும் வழக்கறிஞர்கள் அனுமதி சீட்டு பெற வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை, நேரடி விசாரணை வாயிலாக நடத்த, இருதரப்பு வழக்கறிஞர்களும் சம்மதம் தெரிவித்தால், அவர்கள் ஆஜராக, பொதுவான ஒரு தேதியை, மூன்று நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில், வழக்கறிஞர்களும், சாட்சிகளும், நீதிமன்றத்திற்குள் வந்து செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படும்.

அமர்வு நீதிமன்றத்தில், அனைத்து ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மட்டுமே நடைபெறும். சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், போதைபொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில், வழக்குகள் தாக்கல் செய்வது, விசாரணை போன்றவையும் மேற்கண்ட நடைமுறைகளின்படியே நடைபெறும்.

சி.பி.ஐ., நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம். மற்றும் எம்.பி., - - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், மனுக்களை தாக்கல் செய்ய விரும்புவோர், அதற்கென அறிவிக்கப்பட்டுள்ள, 'இ --மெயில்' முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X