பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் ஆலையை இயக்க அனுமதி வேதாந்தா நிறுவனம் கோரிக்கை

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை:ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஆக்சிஜன் தயாரிப்பு அலகை இயக்க அனுமதிக்கும்படி, வேதாந்தா நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வேதாந்தா நிறுவனம் சார்பில், துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார், முதல்வர், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகம் மற்றும் பிற

சென்னை:ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஆக்சிஜன் தயாரிப்பு அலகை இயக்க அனுமதிக்கும்படி, வேதாந்தா நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் சார்பில், துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார், முதல்வர், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடுமையாக அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான மாநில அரசுகள், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க தடுமாறி வருகின்றன. துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை உட்புறம், தினசரி, 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகு உள்ளது. இது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின்படி, காப்பர் ஆலையும் மூடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில், ஆக்சிஜன் தயாரிப்பு அலகை இயக்க அனுமதிக்க வேண்டும். இது, மாநில அரசுக்கு உதவியாக இருக்கும்; உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் நகல், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாசுக் கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X