பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி தயாரிப்பு பிரதமர் கோரிக்கை

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:தடுப்பூசி தயாரிப்புத் திறனை தொடர்ந்து அதிகரிக்கும்படி, நாடு முழுதும் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று உரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது:குறைந்த கால அவகாசத்தில் தடுப்பூசிகளை தயாரித்த

புதுடில்லி:தடுப்பூசி தயாரிப்புத் திறனை தொடர்ந்து அதிகரிக்கும்படி, நாடு முழுதும் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று உரையாடினார்.அப்போது அவர் பேசியதாவது:குறைந்த கால அவகாசத்தில் தடுப்பூசிகளை தயாரித்த மருத்துவ நிபுணர்களுக்கும், அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கும் பாராட்தை தெரிவிக்கிறேன்.

தற்போது பரிசோதனை நிலையில் உள்ள தடுப்பூசிகளுக்கு விரைவாகவும், அறிவியல் பூர்வமாகவும் அனுமதி வழங்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். கொரோனாவுக்கு எதிரான போரில், தனியார் மருத்துவத்துறை மிகப்பெரிய பங்கு வகித்து வருகிறது.

வரும் நாட்களில், தடுப்பூசி வழங்கும் பணியிலும், தனியார் துறை சிறப்பான சேவையாற்ற வேண்டும். மருத்துவமனைகளுக்கும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே, சிறப்பான ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே, இது சாத்தியமாகும்.தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு திறனை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அப்போது தான், நாடு முழுதும் உள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X