இந்தியாவுக்கு போகாதீங்க: அமெரிக்கா அறிவுறுத்தல்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:'கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவுக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்' என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. நம் நாட்டில் தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந் நிலையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, வெளியிட்டுள்ள

வாஷிங்டன்:'கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவுக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்' என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

நம் நாட்டில் தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந் நிலையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வேகமாக பரவி வருவதால், இந்தியா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள், முழுமை யாக தடுப்பூசி போட்ட பின் தான், செல்ல வேண்டும். அப்போதும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இந்தியாவிலிருந்து திரும்பி வந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் தான், அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X