தற்காலிக நீதிபதி நியமனத்துக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:உயர் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளை விரைவாக விசாரிக்க, தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, சில வழிகாட்டுதல்களை, உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.ஓய்வுநாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில், தேவையான அளவு நீதிபதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், 57 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள், விசாரிக்கப் படாமல் நிலுவையில்

புதுடில்லி:உயர் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளை விரைவாக விசாரிக்க, தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, சில வழிகாட்டுதல்களை, உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.


ஓய்வு

நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில், தேவையான அளவு நீதிபதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், 57 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள், விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளன. மேலும், உயர் நீதிமன்றங்களில், 40 சதவீதத்திற்கும் மேலான நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதையடுத்து, வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை, தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.இந்த நியமனம் தொடர்பாக, சில வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியது.

இது குறித்து, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு கூறியதாவது: குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை விட, 20 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அங்கு தற்காலிக நீதிபதிகளை நியமித்துக் கொள்ளலாம்.நிலுவையில் உள்ள வழக்குகளில், 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் இருந்தால், அங்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.

இந்த தற்காலிக நீதிபதிகள் நியமனம் என்பது, வழக்கமான நீதிபதிகள் நியமனத்துக்கு மாற்று அல்ல. விலக்குஓராண்டுக்குள் ஓய்வு பெற்ற நீதிபதிகளை, உயர் நீதிமன்றங்கள் பரிந்துரைக்க வேண்டும். சில குறிப்பிட்ட வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.நிரந்தர நீதிபதிகளுக்கு இணையான ஊதியம், தற்காலிக நீதிபதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். தற்காலிக நீதிபதிகளின் பதவிக் காலம், இரண்டு முதல், மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X