பொது செய்தி

இந்தியா

தடுப்பூசிகளின் விலை என்ன?

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசுகள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும், மே 1ம் தேதி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடலாம். அதற்கு முன், ஒரு, 'டோஸ்' தடுப்பூசிக்கான
தடுப்பூசிகள், விலை என்ன?

புதுடில்லி:கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசுகள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும், மே 1ம் தேதி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடலாம். அதற்கு முன், ஒரு, 'டோஸ்' தடுப்பூசிக்கான விலையை நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், உலகெங்கும் தடுப்பூசிகளின் விலை குறித்து பார்க்கலாம்.




பைசர் பயோ என் டெக்



அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி, அமெரிக்காவில், ஒரு டோஸ், 1,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள், இந்த மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன அவை, 1,108 ரூபாய்க்கு இந்த மருந்தை வாங்குகின்றன.
இஸ்ரேல், 2,262 ரூபாய்க்கு இந்த மருந்தை வாங்குகிறது.தற்போது, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.மாடர்னா அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி விலை, 1,885 முதல், 2,790 ரூபாய் வரை இருக்கும் என, கூறப்படுகிறது.தற்போதைக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இஸ்ரேலில் பயன்படுத்தப்படுகிறது.


ஸ்புட்னிக் வி



ரஷ்ய நாட்டு தயாரிப்பான இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் விலை, ஒரு டோஸ், 750 ரூபாயாக இருக்கும். அதே நேரத்தில், ரஷ்யாவில் இலவசமாக வழங்கப்படுகிறது.ஜான்சன் அண்டு ஜான்சன்ஒரு டோஸ் மட்டுமே வழங்க வேண்டிய இந்தத் தடுப்பூசியின் விலை, 750 ரூபாய்.


கோவிஷீல்ட்



ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை, நம் நாட்டில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, சீரம் மையம் தயாரிக்கிறது.இந்த மருந்து, தனியார் மருத்துவமனைகளில், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலை குறைவானதாக இந்த தடுப்பூசி உள்ளது.


கோவாக்சின்



உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த தடுப்பூசி. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய வைராலஜி மையம் இணைந்து உருவாக்கியுள்ளன. இது, ஒரு டோஸ், 206 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-ஏப்-202117:32:42 IST Report Abuse
M  Ramachandran மக்களுக்கு இந்தியாவில் தயாரிக்கும் மருந்தின் அருமை தெரியவில்லை. அல்லது எதிரி காட்சிகள் தப்பான எண்ணத்துடன் மக்களுக்கு போச்சாண்டி காட்டுகின்றன.கட்சி தலைவர்கள் பின் பக்கமாக சப்தமில்லாமல் போட்டுட்டுக்கொள்கின்றன. மறைந்த நடிகர் விவேக்கின் உரையை கேளுங்கள்.அவர் எல்லோரும் தடுப்பூசி பற்றி அச்சம் தேவை இல்லை என்பதை வீடியோ வாக பதிவிட்டுள்ளார்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202115:21:54 IST Report Abuse
sankaseshan பணம் உள்ளவன் அதிக விலைகொடுத்து இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு மருந்தை வாங்கலாம் , முடியாதவர்கள் விலைகுறைவான இந்திய மருந்துகளை உபயோகிக்கலாம் .
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
21-ஏப்-202112:43:54 IST Report Abuse
Loganathan Kuttuva குறைந்த விலையில் கிடைக்கும் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X