சுஷாந்த் படத்துக்கு எதிர்ப்பு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, சுஷாந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு , 'நோட்டீஸ்' அனுப்பியது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஆண்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, விசாரணை நடந்து

புதுடில்லி:நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, சுஷாந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு , 'நோட்டீஸ்' அனுப்பியது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஆண்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்களை எடுக்க, சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

அதன்படி, 'நியாய்: தி ஜஸ்டிஸ், சூசைட் ஆர் மர்டர்: எ ஸ்டார் வாஸ் லாஸ்ட், சஷான்க்' உள்ளிட்ட பெயர்களில், அந்தப் படங்கள் தயாரிக்கப்பட உள்ளன.இந்நிலையில், சுஷாந்த் கதையை படமாக எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை சிங் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்தத் திரைப்படங்கள், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், தாக்கத்தை ஏற்படுத்தும். சுஷாந்த் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இந்தப் படங்கள் எடுக்கப்படலாம் என்பதால், அந்தப் படங்களில் என் மகனின் பெயர், புகைப்படங்கள் உள்ளிட்ட என் மகன் சார்ந்த எதையும் பயன்படுத்த கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி மனோஜ் குமார் ஓக்ரி, சம்பந்தப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X