புதிய தடுப்பூசி கொள்கை காங்., கடும் விமர்சனம்

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை, பிற்போக்குத்தனமானது' என, காங்கிரஸ் விமர்சித்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்தது. அதில், 'தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும், 50 சதவீத மருந்துகளை, மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்ய அனுமதியளிக்கப் படுகிறது' என,

புதுடில்லி:'மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை, பிற்போக்குத்தனமானது' என, காங்கிரஸ் விமர்சித்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்தது.

அதில், 'தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும், 50 சதவீத மருந்துகளை, மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்ய அனுமதியளிக்கப் படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசின் புதிய தடுப்பூசி கொள்கையை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:'ஒரு நாடு, ஒரே வரி; ஒரே தேர்தல்' என,அனைத்தையும் ஒன்றாக்க வேண்டும் என்பதில்,மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், தடுப்பூசி கொள்கையில் மட்டும், ஒரு நாடு, ஒரே தடுப்பூசி விலையை கடைப்பிடிக்காதது ஏன்? அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை பிற்போக்குத்தனமானது; சமத்துவமற்றது. இதனால், தடுப்பூசி விலை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு, விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கி, மாநில அரசுகளின் தலை மீது, மத்திய அரசு கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. தடுப்பூசி போடும் திட்டத்தில், ஏழைகளை ஒதுக்கி வைக்கும், மத்திய அரசின் நடவடிக்கையாக, புதியக் கொள்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், இதை விமர்சித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-202123:23:07 IST Report Abuse
தமிழவேல் இது ஒரு காமதேனு.. மருத்துவக் குறிப்புகள் படி, இப்போது போட்டுக்கொள்ளும் ஊசிகள், எவ்வளவு காலத்திற்கு தாங்கும் என்று யாருக்குமே தெரியாது. சில மருத்துவ ஸ்தாபனங்கள் 6 மாதங்களுக்கு மட்டுமே உத்திர வாதம் தருகின்றன. அப்படி இருந்தும், ஊசி போட்ட பின்னும் திரும்பவும் வருவது தெரிந்ததே. இதனால்தான் ஊசி போட்டுக்கொண்டாலும், கொரோனா சுகாதார விதிமுறைகளைக் (மாஸ்க், இடைவெளி....) கடைபிடிக்க வேண்டுமென்பதன்காரணங்களில் இதுவும் ஒன்று. அதாவது வருடாவருடம் அனைவரும் இரண்டுமுறை ஊசி போட்டுக்கொள்ளவும் நேரலாம். அவங்களுக்கு காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். நமக்கு பாம்பும் தேளும் கொட்டுனாப்போல இருக்கும்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
21-ஏப்-202108:15:26 IST Report Abuse
R.RAMACHANDRAN நாட்டில் உள்ள பணக்காரர்களெல்லாம் இணைய வழியில் பதிவு செய்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இனி யார் எக்கேடு கேட்டால் என்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X