புதிய தடுப்பூசி கொள்கை காங்., கடும் விமர்சனம்| Dinamalar

புதிய தடுப்பூசி கொள்கை காங்., கடும் விமர்சனம்

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி:'மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை, பிற்போக்குத்தனமானது' என, காங்கிரஸ் விமர்சித்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்தது. அதில், 'தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும், 50 சதவீத மருந்துகளை, மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்ய அனுமதியளிக்கப் படுகிறது' என,

புதுடில்லி:'மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை, பிற்போக்குத்தனமானது' என, காங்கிரஸ் விமர்சித்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்தது.

அதில், 'தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும், 50 சதவீத மருந்துகளை, மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்ய அனுமதியளிக்கப் படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசின் புதிய தடுப்பூசி கொள்கையை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:'ஒரு நாடு, ஒரே வரி; ஒரே தேர்தல்' என,அனைத்தையும் ஒன்றாக்க வேண்டும் என்பதில்,மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், தடுப்பூசி கொள்கையில் மட்டும், ஒரு நாடு, ஒரே தடுப்பூசி விலையை கடைப்பிடிக்காதது ஏன்? அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை பிற்போக்குத்தனமானது; சமத்துவமற்றது. இதனால், தடுப்பூசி விலை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு, விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கி, மாநில அரசுகளின் தலை மீது, மத்திய அரசு கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. தடுப்பூசி போடும் திட்டத்தில், ஏழைகளை ஒதுக்கி வைக்கும், மத்திய அரசின் நடவடிக்கையாக, புதியக் கொள்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், இதை விமர்சித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X