முக கவசம் இல்லாததால் ரூ.10 ஆயிரம் அபராதம்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
தியோரியா:உத்தர பிரதேசத்தில், பொது இடத்தில் முக கவசம் அணியாத ஒருவருக்கு, முதல் முறையாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது. இங்கு, கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளதால், முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அரசு

தியோரியா:உத்தர பிரதேசத்தில், பொது இடத்தில் முக கவசம் அணியாத ஒருவருக்கு, முதல் முறையாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது. இங்கு, கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளதால், முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

தியோரியா மாவட்டம் பரியார்பூர் பகுதியைச் சேர்ந்த அமர்ஜித் யாதவ், பொது இடத்தில் முக கவசம் அணியாமல் வந்தார். உடனடியாக அவருக்கு போலீசார், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். உ.பி.,யில்,, முக கவசம் அணியாததற்காக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்திய முதல் நபர் இவர். இதுபற்றி போலீசார் கூறும்போது, 'சில நாட்களுக்கு முன், முக கவசம் அணியாமல் வந்த அமர்ஜித் யாதவுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், முக கவசங்களையும் வழங்கினோம். மீண்டும் விதி மீறிய அவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X