பொது செய்தி

இந்தியா

யூனியன் பிரதேசங்களுக்கு அரசு அறிவுரை

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:அடுத்த மூன்று வாரங்களுக்கு, கொரோனா பரிசோதனைகள், பரிசோதனை கூடங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அதிகரிக்கும்படி, அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று பரவல் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண்

புதுடில்லி:அடுத்த மூன்று வாரங்களுக்கு, கொரோனா பரிசோதனைகள், பரிசோதனை கூடங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அதிகரிக்கும்படி, அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று பரவல் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆய்வுக் கூட்டம் நடந்தது

.இதில், அனைத்து யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், போலீஸ் டி.ஜி.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் நடமாட்டம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, மார்க்கெட்டுகள் செயல்படும் நேரங்களை ஒழுங்கு முறைப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிமுறைகளை, அனைத்து யூனியன் பிரதேச அரசுகளும் கடுமையாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அடுத்த மூன்று வாரங்கள் மிக முக்கியமான காலகட்டம் என்பதால், பரிசோதனைகள், பரிசோதனை கூடங்களை அதிகரிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.அடுத்த மூன்று வாரங்களுக்கான செயல்திட்டங்களை வகுத்து, அதை நடைமுறைப்படுத்தும்படி, அனைத்து யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொழிலாளர்களுக்குகட்டுப்பாட்டு அறை



கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ, 20 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க பட்டு உள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று கூறியுள்ளது.'இ - மெயில், மொபைல் போன், வாட்ஸ் ஆப்' வாயிலாக புலம் பெயர் தொழிலாளர்கள், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X