பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் இறப்பு ஆய்வுக்குழு 'அம்போ?' வனத்துறை மீது ஆர்வலர்கள் புகார்!

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை:சந்தேகத்துக்குரிய வகையில், யானைகள் இறந்தது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர் நிலை குழுவும், அதன் அறிக்கையும் மாயமாகியுள்ளதாக, வன உரியின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், சில ஆண்டுகளாக, வனப்பகுதிகளில் யானைகள் மர்மமான முறையில் இறப்பது அதிகரித்துள்ளது. முழுமையான விசாரணைஇதன் பின்னணி குறித்து, முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, வன

சென்னை:சந்தேகத்துக்குரிய வகையில், யானைகள் இறந்தது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர் நிலை குழுவும், அதன் அறிக்கையும் மாயமாகியுள்ளதாக, வன உரியின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், சில ஆண்டுகளாக, வனப்பகுதிகளில் யானைகள் மர்மமான முறையில் இறப்பது அதிகரித்துள்ளது. முழுமையான விசாரணைஇதன் பின்னணி குறித்து, முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, 2006 ஜன, 1 முதல், 2020 ஜூன், 30 வரை, யானைகள் இறந்தது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள, வனத்துறை முடிவு செய்தது.

கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நீரஜ் குமார் சேகர் தலைமையில், 11 பேர் அடங்கிய உயர் நிலை குழுவை, 2020 ஜூலையில், தமிழக வனத்துறை அமைத்தது. மதுரை மாவட்ட வன அலவலர் எஸ்.ஆனந்தா, இதன் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். இக் குழு அமைக்கப்பட்ட போதே, அதன் உறுப்பினர்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின் இக்குழு என்னவானது என்பது, மர்மமாக உள்ளது.


இடமாற்றம்



வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: யானைகள் இறப்பு தொடர்பான மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட, உயர் நிலை குழுவின் செயல்பாடுகளே மர்மமாகி உள்ளது. இக் குழு அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, தலைமை வன உயிரின பாதுகாவலர் உள்ளிட்ட, பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.வனத்துறை தலைவர் உத்தரவுப்படி, 2020 டிசம்பரில் இக்குழு அறிக்கை அளித்திருக்க வேண்டும்.

இதன்படி அறிக்கை வந்ததா; அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று விசாரித்தால், வனத்துறை தரப்பில் உரிய பதில் கிடைப்பதில்லை.இந்த விஷயத்தில், உண்மை நிலவரத்தை அதிகாரிகள் மறைத்தால், நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X