சம்பவம் செய்தி

தமிழ்நாடு

, 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை:திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில், ஒடிசாவை சேர்ந்த, 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட கலெக்டருக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும், மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையத்தில் உள்ள, தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு, ஒடிசாவை சேர்ந்த, 19 பெண்கள் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டனர்.

சென்னை:திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில், ஒடிசாவை சேர்ந்த, 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட கலெக்டருக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும், மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையத்தில் உள்ள, தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு, ஒடிசாவை சேர்ந்த, 19 பெண்கள் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டனர். அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில், தங்க வைக்கப்பட்டிருந்தனர்.கொரோனா பரவல் காரணமாக, அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பியதால், தாங்களும் ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும் என, 19 பெண்களும் கேட்டனர்.

இதற்கு, நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன், 19 பெண்களை தனி அறையில் பூட்டி வைத்ததுடன், மொபைல் போன்களையும் பறித்தது. ஊர் திரும்பிய தொழிலாளர்கள், ஒடிசாவில் உள்ள அதிகாரிகளிடம், பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து, புகார் அளித்தனர்.அவர்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தை அடுத்து, வருவாய் துறையினர் திடீர் சோதனை நடத்தி, 19 பெண்களையும் மீட்டனர்.

இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, திருப்பூர் மாவட்ட கலெக்டர், தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X