சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஞ்சி 'அம்மா' உணவகத்தில் கூரை உடைந்து விழுந்தது

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், 'அம்மா' உணவகத்தில், கூரை உடைந்து விழுந்தது. இரவில் விழுந்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள, அம்மா உணவகம், முன்னாள் முதல்வர் ஜெ., இருக்கும்போது திறந்து வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் பலருக்கு, குறைந்த விலையில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், 'அம்மா' உணவகத்தில், கூரை உடைந்து விழுந்தது.

இரவில் விழுந்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள, அம்மா உணவகம், முன்னாள் முதல்வர் ஜெ., இருக்கும்போது திறந்து வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் பலருக்கு, குறைந்த விலையில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் இயக்கப்படும் இந்த உணவகத்தை, நேற்று காலை, ஊழியர்கள் திறந்தனர். அப்போது, மேற்கூரை உடைந்து, பாதி விழுந்தும், பாதி அந்தரத்திலும் தொங்கியது. கூரை விழுந்ததில், மின் விசிறி சேதமடைந்திருந்தது.

தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள், உணவகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரவில், மேற்கூரை விழுந்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 'உணவகத்தில் உடைந்து தொங்கிய, 'பால்சீலிங்' அகற்றப்பட்டது.விரைவில் சீரமைக்கப்பட்டு, உணவகம் மீண்டும்செயல்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X