மின் மயானங்களில் உடல்களை எரிக்க, டோக்கன் நடைமுறை| Dinamalar

மின் மயானங்களில் உடல்களை எரிக்க, 'டோக்கன்' நடைமுறை

Added : ஏப் 20, 2021
Share
பெங்களூரு : பெங்களூரில், கொரோனா இறப்புகள் அதிகரிப்பதால், மின் மயானங்களில், உடல்களை எரிக்க, 'டோக்கன்' நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பெங்களூரில் கொரோனா தொற்றால், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கிறது. மின் மயானங்களுக்கு, இரவு, பகலாக உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால், மின் மயான ஊழியர்கள் சோர்வடைந்துள்ளனர். இரவு முழுவதும் ஓய்வின்றி பணியாற்றுவதால்,

பெங்களூரு : பெங்களூரில், கொரோனா இறப்புகள் அதிகரிப்பதால், மின் மயானங்களில், உடல்களை எரிக்க, 'டோக்கன்' நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பெங்களூரில் கொரோனா தொற்றால், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கிறது. மின் மயானங்களுக்கு, இரவு, பகலாக உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால், மின் மயான ஊழியர்கள் சோர்வடைந்துள்ளனர். இரவு முழுவதும் ஓய்வின்றி பணியாற்றுவதால், வீட்டுக்கும் செல்ல முடிவதில்லை.உடல்களை சுமந்த ஆம்புலன்ஸ்கள், மயானத்தின் முன் வரிசையாக நிற்கின்றன. இதனால், சுமனஹள்ளி மின் மயானத்தில், டோக்கன் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, டோக்கன் அளிக்கப்படும். அதில் குறிப்பிட்ட வரிசைப்படி, உடல்கள் எரிக்கப்படுகிறது.இந்நிலையில், உடல்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புதிதாக கொண்டு வரப்படும் உடல்கள், வேறு மயானத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனால் உறவினர்கள், வேறு மயானத்தை தேடி அலைவது, தினமும் நடக்கிறது. இதற்கிடையில், பனசங்கரி உட்பட, பல மயானங்கள் அருகில், இறந்தவர்களின் உறவினர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவச உடை, கையுறை அணியாமல் சாஸ்திர, சடங்குகளை செய்கின்றனர். ஊழியர்களும் கூட, எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், உடல்களை எரிக்கும் இடத்துக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X