பொது செய்தி

இந்தியா

பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், பொது மக்கள் நுழைய தடை

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா தொற்று, வேகமாக பரவுவதால், பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரில் கொரோனா தொற்று, வேகமாக பரவுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக, மாநகராட்சி தலைமை அலுவகத்தில், பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்கள்

பெங்களூரு : கொரோனா தொற்று, வேகமாக பரவுவதால், பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரில் கொரோனா தொற்று, வேகமாக பரவுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக, மாநகராட்சி தலைமை அலுவகத்தில், பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்கள் மட்டும், உள்ளே நுழைய அனுமதியுள்ளது.தலைமை அலுவலகத்தின், நுழைவு வாயிலிலுள்ள பாதுகாப்பு ஊழியர், இங்கு பணியாற்றுபவர்களின் அடையாள அட்டையை பரிசீலித்த பின், உள்ளே செல்ல அனுமதிப்பார்.

மிகவும் அவசியம் என்றால் மட்டும், பொது மக்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு மதியம், 3:00 மணிக்கு பின், அனுமதியளிக்கப்படுவர்.கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தும், மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் கூட்டம் இருந்தது. மாநகராட்சியிலும், கொரோனா விதிமுறைகள் அமலில் இருந்தும் கூட, பலரும் சரியாக முக கவசம் அணியாமல் நடமாடினர். எனவே பொது மக்கள் நுழைய, தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X