பொது செய்தி

இந்தியா

வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு வீட்டிலே சிகிச்சை அளிக்க திட்டம்

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவில், கொரோனா தொற்று ஏற்பட்டு, வீட்டில் தனிமையில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சையளிக்க, தனியார் மருத்துவமனைகள், திட்டங்களை அறிவித்துள்ளன. தாண்டவம் கர்நாடகாவில், தினமும், 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். பெங்களூரு, கலபுரகி உட்பட, பல மாவட்டங்களில், கொரோனா தாண்டவம் அதிகரிக்கிறது.அரசு மற்றும் தனியார்

பெங்களூரு : கர்நாடகாவில், கொரோனா தொற்று ஏற்பட்டு, வீட்டில் தனிமையில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சையளிக்க, தனியார் மருத்துவமனைகள், திட்டங்களை அறிவித்துள்ளன.

தாண்டவம் கர்நாடகாவில், தினமும், 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். பெங்களூரு, கலபுரகி உட்பட, பல மாவட்டங்களில், கொரோனா தாண்டவம் அதிகரிக்கிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், படுக்கை பற்றாக்குறையாலும், ஆக்சிஜன் கிடைக்காமலும், கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர்.பேக்கேஜ் திட்டம் இதை மனதில் கொண்டு, பெங்களூரின் சில தனியார் மருத்துவமனைகள், 'கொரோனா கேர்' என்ற பெயரில், பேக்கேஜ் திட்டம் வகுத்துள்ளன. வீட்டில் தனிமையில் சிகிச்சை பெறுவோருக்கு, வீட்டிற்கே சென்று சிகிச்சையளிக்க முன் வந்துள்ளன.

இதற்காக, ஒரு வாரத்துக்கு, 4,999 ரூபாய், இரண்டு வாரங்களுக்கு, 10 ஆயிரத்து, 500 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இரண்டு வார திட்டத்தில் தினமும் டாக்டர், மனநல டாக்டர், செவிலியர்கள், டிஜிட்டல் தெர்மா மீட்டர், ரத்த அழுத்த உபகரணம், பல்ஸ் ஆக்சிமீட்டர், 14 முக கவசம், கிருமி நாசினி பாட்டில் வழங்கப்படும்.ஒரு வார பாக்கேஜில், உணவு வல்லுனர், டாக்டர், செவிலியர்கள் போன்ற வசதிகள் இருக்கும்.சில தனியார் மருத்துவமனைகள், 15 நாட்கள் சிகிச்சைக்கு, நாள் ஒன்றுக்கு தலா, 375 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளன. இது போன்று தனியார் மருத்துவமனைகள், பலவிதமான சலுகைகளை அறிவித்துள்ளன. வீட்டில் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள், ஏதாவது ஒரு திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:கொரோனா கேர் பேக்கேஜ் என்ற பெயரில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் எந்த காரணத்துக்காகவும், பேக்கேஜ் பெயரில் தேவையின்றி, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. சேவை மனப்பான்மையுடன், சிகிச்சையளிக்க வேண்டும்.தொற்று பாதிப்பு தீவிரமில்லாத நோயாளிகளுக்கு, இத்திட்டம் உதவியாக இருக்கும். இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா உட்பட, கடுமையான பிரச்னைகளால் அவதிப்படும் நோயாளிகள், மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறுவது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
21-ஏப்-202117:43:04 IST Report Abuse
Loganathan Kuttuva Good Improvement
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X