பொது செய்தி

இந்தியா

கொரோனா விதிமுறைகளால் திருமண நிகழ்ச்சிகளில் அவதி

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு, வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்த பெற்றோர், கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், அவதியை சந்திக்கின்றனர். ஏப்., 21க்கும் பின், தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருகின்றன. மகன் அல்லது மகளின் திருமணத்துக்காக, லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, திருமண மண்டபங்களை, 'புக்' செய்த பெற்றோர், கவலையில் உள்ளனர்.கொரோனாவை

பெங்களூரு : மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு, வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்த பெற்றோர், கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், அவதியை சந்திக்கின்றனர்.

ஏப்., 21க்கும் பின், தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருகின்றன. மகன் அல்லது மகளின் திருமணத்துக்காக, லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, திருமண மண்டபங்களை, 'புக்' செய்த பெற்றோர், கவலையில் உள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த, மாநில அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. திருமணம் நடத்த, அனுமதி பெறுவது கட்டாயமாக்கியுள்ளது. திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையில் விருந்தினர்கள் பங்கேற்க வேண்டும். இவர்களுக்கு திருமணம் நடத்துவோர், பாஸ் கொடுக்க வேண்டும். பாஸ் வைத்துள்ளோர் மட்டும், திருமணத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.பெற்றோர் பலரும், பிள்ளைகள் திருமணத்துக்கு, உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் அளித்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், முக்கியமானவர்களுக்கு, பாஸ் கொடுப்பதுடன், மற்றவர்களை திருமணத்துக்கு வர வேண்டாம் என, கூற வேண்டிய தர்மசங்கடத்தில், பெற்றோர் சிக்கியுள்ளனர்.இதற்கு முன் பிள்ளைகளின் திருமணம், ஆடம்பரமாக நடக்க வேண்டும் என விரும்பிய பெற்றோர், தற்போது நிர்ணயித்த முகூர்த்தத்தில், எந்த இடையூறுமின்றி திருமணம் நடந்து முடிந்தால் போதும் என, கடவுளிடம் பிரார்த்திக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X